Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ | பயணம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | புதுமைத்தொடர் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அமெரிக்க அனுபவம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
ஜனனி சாயி ஸ்ரீதரன் நாட்டிய அரங்கேற்றம்
தியாக பிரம்ம ஆராதனை
புதுக் கலிஃபோனிய ஊடகங்கள் ஆண்டு விழாவில் 'தென்றல்'
ரஞ்சனி சுகுமாரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
சிகாகோ தமிழ் சங்கம் பொங்கல் விழா
- ஜோலியட் ரகு|மார்ச் 2006|
Share:
Click Here Enlargeஜனவரி 21, 2006 அன்று சிகாகோ தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா கொண்டாடியது. இதில் 450-க்கும் மேற்பட்டோ ர் கலந்துகொண்டனர்.

திவ்யா அனந்தன், தீபா அனந்தன், மணீஷா பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழா முத்தமிழ் விழாவாகவே இருந்தது.

சிகாகோ வீணை ஆசிரியை சரஸ்வதி சோமநாதனிடம் வீணை பயிலும் கோதை ஈஸ்வர், சாரதா கணேஷ் ஆகியோர் பாடினர். தொடர்ந்து பொங்கல் திருநாளைப் பற்றிய ஒரு சிற்றுரையை சிறுமி மதுரா ராம்கி எழுதி வாசித்தார். தருண் அடுத்துப் பாடிய 'தைமாதம் முதல் நாளில் பொங்கலோ பொங்கல்', வெகு பொருத்தம். நப்பின்னை ராஜா அமைத்துத் தந்த 'தை பிறந்தால் வழி பிறக்கும்' பாடலுக்கான நடனத்தை வனிதா ரகுவீர், லயா ராஜா, நித்யா ரவி, ஷாலினி ஆகியோர் ஆடி உள்ளம் கவர்ந்தனர். ரவிசங்கர், ஸ்ரீநிதி, பிரவீணா பாபு, திவ்யா சிவராஜா, மயூரி, பரத், லிஸா, ப்ரென்ட் ஆகியோர் பாடல்கள் வழங்கினர்.

சிறுமி அபிமதியின் யோகாசனப் பயிற்சியோடு கோடிய தமிழ் விளக்கவுரை, உடலையும் உள்ளத்தையும் எவ்வளவு எளிதில் பண்படுத்தலாம் என்பதைத் தெளிவுபடுத்தியது. கலை விழாவை நிறைவு செய்ய சிகாகோ நடன ஆசிரியை வனிதா வீரவல்லி வடிவமைத்து, ரமா, லஷ்மி, ரஞ்சனி, அனு, உஷா, சுஜாதா ஆகியயோர் ஆடிய 'மார்கழி தான் ஒடிப் போச்சே' பாட்டுக்கான நடனம் பலத்த கைதட்டலைப் பெற்றது.

சிகாகோ நாடகப் பிரியாவின் '2100ல் சிகாகோ' என்ற நகைச்சுவை நாடகம் கலகலப்பூட்டியது. இதில் நடித்த சரண்யா, ரவிசங்கர், சோபனா, முத்து, ஸ்ரீனிவாசன், முரளி, கிருஷ், ராஜி, பீடர், ஜெயராமன், சந்திரசேகர் ஆகியோர் பாராட்டத் தக்கவர்கள். இயக்கிய ஷோபனா, ராஜி ஆகியோரையும் பாராட்டியாக வேண்டும்.

பட்டிமன்றம் இல்லாத பொங்கல் விழாவா! யுனிவ் அவர்களை நடுவராகக் கொண்டு 'தமிழ் சின்னத்திரையின் வரவு சிறப்பே! சீரழிவே!' என்ற தலைப்பிலான பட்டி மன்றம் விழாவின் சிகரமாக அமைந்தது. இதில் பங்குபெற்று மிக அருமையாக நகைச்சுவையுடன் வாதிட்டு மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டனர் அனந்தன், டாக்டர் சந்திர மௌலி, சரண்யா ரவி, முத்து நடராஜன், இராமன், வெங்கட் செல்லப்பன், ராஜி, ஹேமா தாசரி, ஈஸ்வரி, ரங்கநாதன் ஆகியோர்.
இந்த நிகழ்ச்சிகள் இனிதே நடக்க வித்திட்ட ரகு, மீனா, யுனிவ் மற்றும் பொருளுதவி செய்த லக்ஷ்மணன் ஆகியோர் தமிழ் நெஞ்சங்களின் நன்றிக்கு உரியவர்கள்.

சங்கத்தின் அடுத்த நிகழ்ச்சி ஏப்ரல் 22-ம் நாள் தமிழ்ப் புத்தாண்டு விழா அரோரா பாலாஜி கோவிலில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற அணுகுங்கள்:

கிரிஷ் 847-884-0043 krish1124@hotmail.com
சந்திரகுமார் 6307368545 nckumar@aol.com

எஸ்டேட் சுபி மற்றும் ஜோலியட் ரகு
More

ஜனனி சாயி ஸ்ரீதரன் நாட்டிய அரங்கேற்றம்
தியாக பிரம்ம ஆராதனை
புதுக் கலிஃபோனிய ஊடகங்கள் ஆண்டு விழாவில் 'தென்றல்'
ரஞ்சனி சுகுமாரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
Share: