Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | அஞ்சலி | நூல் அறிமுகம் | நலம்வாழ | சிரிக்க சிரிக்க
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
NETS சித்திரை விழா
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் சித்திரைத் திருவிழா
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
தென்கலிஃபோர்னியா தமிழ் சங்கம் தமிழ்க் குடும்பக் கொண்டாட்டம்
தமிழ்ப்பள்ளிகள் மூன்றாவது ஆண்டு விழா
- |மே 2010|
Share:
மே 8, 2010, சனிக்கிழமை அன்று அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகளின் மூன்றாவது ஆண்டு விழா இல்லினாய்ஸில் உள்ள அலெக்ஸாண்டர் பள்ளி அரங்கில் நடைபெறும். இப்பள்ளியின் முன்னாள், இந்நாள் மாணவர்களும், ஆசிரியர்களும் அவர்களது இல்லத்தவரும் விழாவில் கலந்துகொள்ளலாம்.

விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க முன்னாள், இந்நாள் மாணவர்களும் ஆசிரியர்களும் வரவேற்கப்படுகிறார்கள். நிகழ்ச்சிகள் (பாடல்கள், கதைகள் கூறல், சிறு நாடகங்கள்) யாவும் தமிழில் மட்டுமே இருத்தல் வேண்டும். பக்தி, திரைப்படம் இவற்றோடு தொடர்புடையவைகளைத் தவிர்க்கும்படி நிர்வாகம் அறிவுறுத்துகிறது.

நாள்: மே 8, 2010, சனிக்கிழமை
காலம்: காலை 11:30 முதல் மாலை 6:30 மணி வரை
(பகல் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது)
இடம்: செயின்ட். அலெக்சாண்டர் பள்ளி அரங்கம்
St. Alexander School Hall
136 South Cornell Ave.
Villa Park, IL: 60181

போட்டிகள்:

திருக்குறள் ஒப்பித்தல்:
அதிகப்படியான திருக்குறள் (குறைந்தது 50 குறள்கள்) ஒப்பிக்கும் முதல் ஐந்து மாணாக்கர்களுக்கு குறள் ஒன்றுக்கு டாலர் ஒன்று வீதம் பரிசு தரப்படும். (அதிகப்படியான முதல் பரிசு 1330 தாலர்கள்)
பரிசு பெறும் மாணாக்கரின் பெற்றோர், ஆசிரியர்/ஆசிரியயைக்குப் பரிசுகள் உண்டு.

போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் மாணாக்கர்கள் யாவருக்கும் முயற்சிப் பரிசுகள் உண்டு.

தமிழ் எழுத்து, சொற்கள், சொற்றொடர்கள் போட்டி:
கொடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தி அதிகப்படியான சொற்களைக் கூறல், எழுதல். சொற்றொடர்களை எழுதல். (வகுப்பு வாரியான போட்டி)
சொல் காட்டு:
தேர்ந்தெடுத்த சொற்களில் ஒன்றைக் குழுவிலுள்ள மாணக்கர்கள் சைகை மூலமாகவும், தமிழில் விளக்குதல் மூலமாகவும் செய்ய, குழுவில் ஒருவர் அந்தச் சொல்லைத் தமிழில் எழுதல் வேண்டும். (தமிழ் அல்லாத மொழியில் விளக்கம் தரும் குழு போட்டியில் பங்கு இழக்கும்.)

குழுக்கள் பள்ளி வகையாகவும், பள்ளி அல்லாத வகையிலும் இருக்கலாம்.

சொற்சிலம்பு: குழுமியுள்ள ஒருவர் ஒரு தமிழ்ச் சொல்லைக் கூறவேண்டும். வரிசையில் அடுத்து உள்ளவர் சொல்லப்பட்ட சொல்லின் கடைசியாக உள்ள எழுத்தில் (சொல்லிற்கு முன் வரக்கூடியது) ஆரம்பித்து வேறு ஒரு புதிய சொல்லைக் கூறவேண்டும். (சொல்லாதவர் போட்டியிலிருந்து நீக்கப்படுவார்). வரிசையில் அடுத்து உள்ளவர் முன்னவர் சொன்ன அந்தச் சொல்லின் கடைசி எழுத்தில் ஆரம்பித்து ஒரு புதிய சொல்லைக்கூற வேண்டும். இதில் 3 பரிசுகள் தவிர சிறப்புப் பரிசுகள் உண்டு.

விழாவில் கலந்து கொள்ளவும், நிகழ்வுகளில் பங்கேற்கவும் முன்பதிவு தேவை. பதிவிற்கு உங்கள் தமிழ்ப்பள்ளி பொறுப்பாளர்களைத் தொடர்பு கொள்ளவும்.

தமிழ்ப்பள்ளி ஆண்டு விழாக்குழு
More

NETS சித்திரை விழா
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் சித்திரைத் திருவிழா
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
தென்கலிஃபோர்னியா தமிழ் சங்கம் தமிழ்க் குடும்பக் கொண்டாட்டம்
Share: 




© Copyright 2020 Tamilonline