Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | ஹரிமொழி | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | கவிதைப்பந்தல்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
சிகாகோ ஜே பிர்ட்ஸ்கர் அரங்கில் நாட்யா டான்ஸ் தியேடர் நிகழ்ச்சி
சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் 39வது ஆண்டு விழா
கொலரடோ முத்தமிழ் விழா-கோடைத் திருவிழா
சிகாகோவில் ஸ்ரீ மஹா ருத்ரம்
ஏழைச் சிறுவர் கல்விக்கு நிதி திரட்ட 'குஜாரிஷ்'
- ஜெயா பத்மநாபன்|ஆகஸ்டு 2009|
Share:
Click Here Enlargeஆகஸ்ட் 29, 2009 அன்று சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியிலுள்ள வெஸ்ட் வேல்லி கல்லூரியில் மாலை 5:30 முதல் ‘குஜாரிஷ்' என்ற இசை, நடன நிகழ்ச்சி ஒன்றை ‘பிரதம்' அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் அஷ்வின் ரங்கன், சாங்க்யா கிமிகர், பிரகாஷ்-சபினா வாஸ்வானி, ராகினி ஸ்ரீனிவாசன், ராஜ் ராகவன், சாரு ராய், வாசு ரங்கநாதன் ஆகியோர் பாடுவர். மேடையைக் கலகலக்கச் செய்ய ‘தி மோனா சம்பத் டான்ஸ் கம்பெனி' குழுவினர் வருகிறார்கள்.

லாபநோக்கற்ற தன்னார்வ அமைப்பான பிரதம் பிற்பட்ட சிறாருக்குக் கல்வி தருவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்தியாவில் சுமார் 15 மாநிலங்களில் மில்லியன் மாணாக்கர்களுக்கு மேல் அடிப்படைக் கல்வி தந்துள்ளது. “கிடைக்கும் ஒவ்வொரு டாலரிலும் அதிகபட்ச நன்மையைச் செய்வதற்கு நாங்கள் முன்னுரிமை தருகிறோம்” என்கிறார் அமெரிக்காவில் பிரதம் அமைப்பின் தலைவர் டாக்டர் அதுல் வரதாச்சாரி. “பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில் சிறுவர்கள் 12 மணி நேரம் அற்பக் கூலிக்கு உழைக்கும்படி வற்புறுத்தப் படுகிறார்கள். பெற்றோர், போலீசார், முதலாளிகள் இவர்களால் துன்புறுத்தப்படுகிறார்கள்” என்று தனது லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் கட்டுரையில் எழுதுகிறார் சித்ரா திவாகருணி. இந்தச் சூழலிலிருந்து மீட்டு கல்விக்கூடங்களுக்கு இவர்களை அனுப்பும் நற்பணியைச் செய்கிறது பிரதம். அப்படிப்பட்ட காஜல் இன்றைக்குத் தனது வகுப்பின் முதல் மாணவியாக வருகிறார்!

இந்த நற்பணியில் நீங்களும் பங்கு பெறலாம்.

நுழைவுச் சீட்டின் விலை: $20, $50.
நுழைவுச் சீட்டு வாங்க: mangala@yahoo.com - 650-969-0421.
ஜயா பத்மநாபன்
More

சிகாகோ ஜே பிர்ட்ஸ்கர் அரங்கில் நாட்யா டான்ஸ் தியேடர் நிகழ்ச்சி
சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் 39வது ஆண்டு விழா
கொலரடோ முத்தமிழ் விழா-கோடைத் திருவிழா
சிகாகோவில் ஸ்ரீ மஹா ருத்ரம்
Share: 




© Copyright 2020 Tamilonline