Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | சாதனையாளர்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சந்தியா சந்திரசேகரன் இசை அரங்கேற்றம்
மிச்சிகன் தமிழ்ச் சங்க விழா
சின்மயா மிஷன் ஆல்ஃபரட்டா தமிழ் மையம் நான்காம் ஆண்டு நிறைவு விழா
மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் ‘பிரம்மரிஷி' நாடகம்
பெர்க்கலி தமிழ் பீடத்தின் ஐந்தாவது தமிழ் மாநாடு
நிஷா பலராமன் நாட்டிய அரங்கேற்றம்
வித்யா தம்பியய்யா நடன அரங்கேற்றம்
சிகாகோ ‘பரதம்' வழங்கிய நாட்டியக் காட்சி
மிச்சிகன் தமிழ்ச் சங்கம்: ஈஸ்டர் முட்டை வேட்டை
டொரொண்டோவில் திருவையாறு.
ஹூஸ்டன் பாரதி கலைமன்றம் தமிழ்ப் புத்தாண்டு விழா
கலிஃபோர்னியாத் தமிழ்க் கழகம் பத்தாவது ஆண்டு விழா
- டில்லி துரை|ஜூன் 2009|
Share:
Click Here Enlargeமே 17, 2009 அன்று, சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவியருக்கு தமிழ் பயிற்றுவிக்கும் கலிஃபோர்னியாத் தமிழ்க் கழகத்தின் (CTA) பத்தாவது ஆண்டு விழா, கூபர்டினோவின் டி அன்சா கல்லூரி வளாகத்திலுள்ள ஃப்ளின்ட் மைய அரங்கத்தில் நடைபெற்றது. தலைவர் வெற்றிச்செல்வி ராஜமாணிக்கம் அவர்கள் நோக்கங்களையும், வளர்ச்சியையும் எடுத்துக் கூறி, அதன் பின்னணியில் இருக்கும் மாணவர், பெற்றோர், ஆசிரியர், தொண்டூழியர்கள், நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்து, வரவேற்று நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

கூபர்டினோ, எவர்க்ரீன், ஃப்ரீமான்ட், ப்ளசென்டன் கிளைகளின் மாணவ மாணவியர் பங்கு பெற்றனர். 815 மாணவ மாணவியர், 69 சிறு நாடகங்கள், பட்டி மன்றங்கள், பாடல்கள், நடனங்களை அளித்தனர். அவர்களின் மொழித்திறனும், கலைத்திறனும் பார்க்க வியப்பாகவும், பெருமையாகவும் இருந்தது. தமிழ்நாட்டில்கூட இவ்வளவு சிறப்பான மாணவர் நிகழ்ச்சிகளை பார்த்ததில்லை என்று வந்திருந்தோர் பாராட்டினார்கள். முனைவர். ஜார்ஜ் ஹார்ட், பெர்க்கலி தமிழ்ப் பீட தலைவர், அவர்கள் கலிஃபோர்னியா தமிழ்க் கழக பள்ளி இறுதி வகுப்பை முடித்த ஷ்ரெயாஸ் ஸ்ரீனிவாசன், விக்னேஷ் வெங்கட்ராமன், ப்ரீத்தி பத்மனாபன், ஸ்வாதி பாலாஜி ஆகியோருக்குப் பட்டங்கள் வழங்கிச் சிறப்புரையாற்றினார்.

டாக்டர் டென்னிஸ் W. பிரௌன் (Director of Secondary Education, Fremont Unified School District, Fremont) அவர்கள் ப்ரீமாண்ட் மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கிச் சிறப்புரையாற்றினார். திருவாட்டி அலிஸன் கோய் (Coordinator of Educational Options, FUHSD, Sunnyvale) அவர்கள் கூபர்டினோ மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிச் சிறப்புரையாற்றினார். முனைவர் மு. பொன்னவைக்கோ, துணைவேந்தர், பாரதிதாசன் பல்கலைக் கழகம், அவர்கள் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் கல்வி மையத்தை துவங்கி வைத்து ஆற்றிய சிறப்புரையின் பதிவு ஒலிபரப்பப் பட்டது. இளங்கோ மெய்யப்பன் அவர்கள் மேடையிலிருந்து நன்றி கூறினார்.

இணைய தளம்: www.catamilacademy.org
டில்லி துரை
More

சந்தியா சந்திரசேகரன் இசை அரங்கேற்றம்
மிச்சிகன் தமிழ்ச் சங்க விழா
சின்மயா மிஷன் ஆல்ஃபரட்டா தமிழ் மையம் நான்காம் ஆண்டு நிறைவு விழா
மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் ‘பிரம்மரிஷி' நாடகம்
பெர்க்கலி தமிழ் பீடத்தின் ஐந்தாவது தமிழ் மாநாடு
நிஷா பலராமன் நாட்டிய அரங்கேற்றம்
வித்யா தம்பியய்யா நடன அரங்கேற்றம்
சிகாகோ ‘பரதம்' வழங்கிய நாட்டியக் காட்சி
மிச்சிகன் தமிழ்ச் சங்கம்: ஈஸ்டர் முட்டை வேட்டை
டொரொண்டோவில் திருவையாறு.
ஹூஸ்டன் பாரதி கலைமன்றம் தமிழ்ப் புத்தாண்டு விழா
Share: 




© Copyright 2020 Tamilonline