Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
பொது
இரக்கமுள்ள ஆஷ்ரயா
கணினியில் த்மிழ்ச் சேனல்கள் பார்க்க ChannelLive.tv
'Catch Your Mind' தமிழர் எடுக்கும் ஆங்கிலத் திரைப்படம்
- காந்தி சுந்தர்|செப்டம்பர் 2008|
Share:
Click Here Enlargeஎஸ்.டி. கிரியேஷன்ஸ் தயாரிப்பில் செப்டம்பர் மாதம் வெளிவர இருக்கும் முழுநீள ஆங்கிலத் திரைப்படம் ‘Catch Your Mind'. இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமி கந்தன் இதை இயக்கவும் செய்கிறார். லேரி பரத் படேல். மனோ ஹரன் இப்படத்தின் இணைத் தயாரிப்பாளர்கள். ரவி யாதவ் கேமராவைக் கையாண்டிருக்கிறார். சுமார் 95 நிமிடங்கள் ஓடும் இப்படத்தில் நடிகர்கள் முழுதும் அமெரிக்கர்கள். சினிமாத்துறை ஜாம்பவான்கள் உலவும் ஹாலிவுட்டில் ஒரு தமிழர் முழுநீள ஆங்கிலப்படம் ஒன்றை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை திரைப்படக்கல்லூரி மாணவரான சுவாமி கந்தன் மேட்டூரைச் சேர்ந்தவர். MS (எலக்ட்ரானிக்ஸ்), MBA ஆகியவை முடித்தபின் பார்மஸி துறையில் பணிபுரிந்து வருகிறார். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பகுதிநேரம் திரைப்படத் தயாரிப்புப் பற்றி படித்துள்ளார். 2001ம் ஆண்டு 9/11 பாதிப்பில் நியூயார்க் மக்களின் உணர்வுகளை நேரில் கண்டு, அதனைக் கொண்டு 'Secondary Impact' என்ற குறும்படத்தை இயக்கிய அனுபவமும் இவருக்கு உண்டு.

கேட்ச் யுவர் மைண்ட் திரைப்படம் இளம்பருவத்தினருக்கான படம். ஒரு வசதியான வீட்டில் பிறந்த 13வயதுப் பையன் தன் சகவாசத்தால் தவறான வழியில் செல்கிறான். இதை அறிந்த அவனது தாய் அவனை திசை திருப்ப முயலும் போராட்டத்தைப் படம் சித்திரிக்கிறது. அந்த இளைஞர் ரோபோட்களை உருவாக்கி இயக்குவதில் புத்திக்கூர்மை உடையவர். கந்தன் இக்கருத்தை நாஸாவிடம் (NASA) விளக்கி, அவர்களின் ஆதரவோடு, அவர்களது அறிவியல், தொழில்நுட்பத் திட்டங்களை இப்படத்தில் காண்பிக்கிறார். ஃபில்லியில் உள்ள 12 பள்ளிகளில் இருந்து அப்பள்ளி மாணவர்கள் உருவாக்கிய ரோபோக்களை படத்தில் புகுத்தியுள்ளார். மேலும் இவற்றுக்குத் தேவையான ரோபோ இயங்கும் களம் மற்றும் மானிட்டர்களை நாஸா தானே முன்வந்து வழங்கியதுது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் வசிக்கும் பன்னாட்டுச் சமுதாய மக்களிடம், குறிப்பாகத் தாய்மார்களிடம் இப்படத்தின் கருத்தை எடுத்துக் கூறி, அவர்களது உணர்வுகள் மற்றும் கருத்துக்களை வைத்தே திரைக்கதை அமைத்ததாகக் கூறுகிறார் கந்தன். வசனங்களை ஆங்கிலத்தில் எழுதுவதில் பிரச்சனை எழவில்லையா என நாம் கேட்டதற்கு, அங்குதான் தனது திரைப்படப் படிப்பு உதவியதாகக் கூறினார்.
கன்ஸாஸ் சிடியைச் சேர்ந்த லேரி படேல், நண்பர் ஒருவர் மூலம் கந்தன் தயாரிப்பாளர் தேடுவதாகக் கேள்விப்பட்டு தாமே ஆர்வத்துடன் முன்வந்தாராம். 'இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, ஒரு இளைஞர் மனதிலாவது இந்தக் கருத்து படியுமானால், அதுவே எனக்குப் போதும்' என்கிறார் லேரி. இவர்மூலம் மனோ ஹரனும் களத்தில் இறங்கியிருக்கிறார்.

மூன்று ஏஜென்சிக்கள் மூலம் நடிக-நடிகையரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். மேலும், நடிப்பில் தத்ரூபம் இருக்கவேண்டி ஃபில்லியில் உள்ள பள்ளிகள் சிலவற்றின் அனுமதி கோரி, அம்மாணவர்களின் நடை-உடை பாவனைகளை அங்குள்ள உணவகத்தில் அமர்ந்து கவனித்திருக்கிறார் கந்தன்.

இப்படம் தற்போது தணிக்கைக் குழுவின் அனுமதிக்காகக் காத்திருக்கிறது. செப்டம்பர் 19ம் தேதி ஃபில்லி, விரிகுடாப்பகுதி, கன்ஸாஸ் சிடி, நோவை-மிக்சிகன், மாண்ட்ரியல் (கனடா) பகுதிகளில் வெளியிடப்படும். சூப்பர் 16 கேமராவில் ரவி யாதவ் கேமராவைக் கையாண்டிருக்கிறார்.

சுவாமி கந்தனுக்கு சித்தார்த் என்ற வாலிபவயது மகனும், தீக்‌ஷா என்ற மகளும் உள்ளனர். இவரது மனைவி ராஜி கந்தன் கொடுத்த ஊக்கம் தனக்கு இன்றியமையாதது என்கிறார் சுவாமி கந்தன். நல்ல சமூகக் கருத்தைச் சொல்லும் 'Catch Your Mind' பார்த்தோர் மனங்களைக் கவர தென்றலின் வாழ்த்துகள்.

காந்தி சுந்தர்
More

இரக்கமுள்ள ஆஷ்ரயா
கணினியில் த்மிழ்ச் சேனல்கள் பார்க்க ChannelLive.tv
Share: 




© Copyright 2020 Tamilonline