Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | யார் இவர்? | சிரிக்க, சிந்திக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
நியூ ஹாம்ப்ஷயர் இந்தியச் சங்கம் வசந்தத் திருவிழா 2008
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
முதல் அமெரிக்கத் தமிழ் நாடக விழா
டெலவர் வேலி பெருநிலத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்த் தேனீ மற்றும் திருக்குறள் போட்டி
ஸ்ரீ வெங்கடேச கல்யாண உத்சவம்
பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
மிக்சிகன் தமிழ்ச்சங்கம் சித்திரை வசந்தம் - 2008
கலிபோர்னியாவில் பிரம்மஸ்ரீ பாபநாசம் சிவன் இசைவிழா
லக்ஷ்மி ஹோம்ஸ்ரோமுக்கு இயல் விருது
- அ. முத்துலிங்கம்|ஜூன் 2008|
Share:
Click Here Enlargeமே 18, 2008 அன்று தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் சீலி மண்டபத்தில் நடைபெற்றது. இம்முறை வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது லக்ஷ்மி ஹோம்ஸ்ரோமுக்கு வழங்கப்பட்டது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக நவீனத் தமிழ் புனைகதைகள், கவிதைகள் ஆகியவற்றை மொழிபெயர்த்து வெளியிட்டுத் தமிழின் சிறப்பை உலகறியச் செய்துவருபவர் இவர். மொழிபெயர்ப்புக்கு வழங்கும் உயரிய விருதான Hutch Crossword Book Award இவருக்கு இருமுறை கிடைத்திருக்கிறது. தொடர்ந்து இங்கிலாந்து, இலங்கை, இந்தியா, கனடா ஆகிய நாடுகளில் மொழிபெயர்ப்புப் பட்டறைகளும் நடாத்தி வருகிறார். அவர் தன்னுடைய ஏற்புரையில் மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம் பற்றிப் பேசினார். உன்னதமான தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் வெளியுலகத்துக்குத் தெரியவருவதில்லை என்றும், இந்தக்குறை எதிர்காலத்தில் நீங்கித் தமிழின் புகழ் உலகளாவும் என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இயல் விருதை தொடர்ந்து வேறு விருதுகளும் வழங்கப்பட்டன:
புனைவு இலக்கியப் பிரிவில் 'யாமம்' நாவலுக்காக எஸ்.ராமகிருஷ்ணனுக்கும், அபுனைவு இலக்கியப் பிரிவில் 'நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை' நூலுக்காக நாஞ்சில் நாடனுக்கும், கவிதைப் பிரிவில் 'தொலைவில்' கவிதைத் தொகுப்புக்காக வாசுதேவனுக்கும், தமிழ் தகவல் தொழில்நுட்பச் சாதனைக்காக முனைவர் கே.கல்யாணசுந்தரத்துக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவுக்கு பல நாடுகளில் இருந்து எழுத்தாளர்களும், கல்வியாளர்களும் ஆர்வலர்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள்.
அ.முத்துலிங்கம், கனடா
More

நியூ ஹாம்ப்ஷயர் இந்தியச் சங்கம் வசந்தத் திருவிழா 2008
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
முதல் அமெரிக்கத் தமிழ் நாடக விழா
டெலவர் வேலி பெருநிலத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்த் தேனீ மற்றும் திருக்குறள் போட்டி
ஸ்ரீ வெங்கடேச கல்யாண உத்சவம்
பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
மிக்சிகன் தமிழ்ச்சங்கம் சித்திரை வசந்தம் - 2008
கலிபோர்னியாவில் பிரம்மஸ்ரீ பாபநாசம் சிவன் இசைவிழா
Share: 




© Copyright 2020 Tamilonline