Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | கவிதைப்பந்தல் | யார் இவர்? | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
ஸ்ரீகிருபா நடனக் குழுமம் பார்ஸலோனாவில் பரிசு வென்றது
சித்திரை கொண்டாட்டம் : வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்
பெர்க்கலி தமிழ்ப்பீடம் 'கலைஞர் களஞ்சியம்' வெளியீட்டு விழா
தமிழ் புத்தாண்டு விழா : சிகாகோ தமிழ்ச் சங்கம்
தமிழ்ப் புத்தாண்டு விழா டெலவர் பெருநிலப் பள்ளத்தாக்கு தமிழ்ச் சங்கம்
தமிழ் புத்தாண்டு விழா : கொலராடோ தமிழ்ச் சங்கம்
தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம்
நியூ ஹாம்ப்ஷயர் இந்திய சங்கம் (IANH) கல்விப் போட்டிகள்
வேதாத்திரிய வேள்வி தினம்
அவதார்ஸ்' குழுவினரின் 'நினைத்தாலே நடக்கும்'
- சுந்தரேஷ்|மே 2008|
Share:
Click Here Enlarge2008 மார்ச் 29, 30 தேதிகளில் அவதார்ஸ் நாடகக்குழு 'நினைத்தாலே நடக்கும்' நாடகத்தை உட்சைட் பெர்·பார்மன்ஸ் ஆர்ட்ஸ் அரங்கில் அரங்கேற்றியது. வளைகுடாப்பகுதி தமிழ் நாடக ரசிகர்களுக்கு மணிராம் நன்கு தெரிந்த பெயர்தான். இதற்கு முன் 'காசு மேல காசு', 'ரகசிய ஸ்நேகிதியே' ஆகிய நாடகங்களை இயக்கியுள்ள மணிராம் தனது அவதார்ஸ் குழுவின் மூலம் இந்த வெற்றி நாடகத்தைத் தந்திருக்கிறார்.

பார்ப்பதை நம்புகிறோமா அல்லது நம்புவதைப் பார்க்கிறோமா? வாழ்க்கை என்பது நாம் எடுக்கும் முடிவுகளைச் சுற்றி வளர்வதே அல்லவா? அந்த முடிவுகளை நாம் தீர்மானிப்பதற்கான காரணங்கள் யாவை? நம் கனவுகளா, வாழ்க்கை நெறிமுறையா அல்லது கண நேர உந்துதலா? இவைதாம் நாடகத்தின் மையக் கரு.

அமெரிக்கக் கனவில் வாழும் சாதாரண நடுத்தரக் குடும்பத்துப் பெண் யமுனா. அலுவலகத்தில் செக்கு மாடு வாழ்க்கை வாழும் அவரது தந்தை கேசவனுக்கும் அமெரிக்க மாப்பிள்ளைக்குப் பெண்ணை மணமுடித்துத் தருவதே கனவு. கால் சென்டரில் வேலை பார்க்கும் பிச்சையின் கல்யாணப் பேச்சு சோழியூர் சொக்கநாதன் என்ற ஜோதிடர் வடிவில் இந்தக் கனவில் கலக்க, அதன் தொடர்ச்சியாய் உருவாகும் திருப்பங்கள் என்று சுவாரஸ்யமான கதை யுடன் நாடகம் வேகமாக நகர்கிறது.

முக்கியக் கட்டங்களில் பார்வையாளர் களிடம் கதாபாத்திரத்தின் அடுத்த நடவடிக்கை குறித்த கேள்வி கேட்கப்பட்டு அதன் போக்கில் நாடகத்தைச் செலுத்தி யிருப்பது புதுமை. நாடகம் முழுவதும் நகைச்சுவை வியாபித்து இருகிறது. வாய்விட்டுச் சிரிக்கச் செய்த நகைச்சுவைக் காட்சிகள் ஏராளம்.

ஒவ்வொரு பாத்திரத்தையும் கவனமாய்ச் செதுக்கியிருக்கும் மணிராமுக்கு ஒரு சபாஷ். அரங்க அமைப்பைப் பாராட்டத்தான் வேண்டும். குறிப்பாக மாடி வீடு, இரவு, நிலா ஆகியவை வியக்க வைத்தன. ஒப்பனை--குறிப்பாக பாட்டி, கேசவன் ஆகியோரது ஒப்பனை--பிரமாதம்.
Click Here Enlargeநடுத்தர வயதுத் தந்தையின் கவலைகள், ஏமாற்றங்கள், எரிச்சல்கள் ஆகியவற்றை முகத்தில் தேக்கி வைத்து பாத்திரத்துக்கு உயிரூட்டிய சிவகுமார் ஜெயராமன்; தனது யதார்த்தமான நடிப்பு, அநாயாசமாக உதிர்த்த கமெண்டுகளின் மூலம் கைதட்டல்களை அள்ளிச்சென்ற 'பாட்டி' ரேவதி சீதாராமா; கதாநாயகனின் நண்பனாக வரும் நந்தாவின் (பாலாஜி நடராஜன்) இயல்பான நகைச்சுவை; சோழியூர் சொக்கலிங்கமாக வரும் நடுத்தர வயதுத் தந்தையின் கவலைகள், ஏமாற்றங்கள், எரிச்சல்கள் ஆகியவற்றை முகத்தில் தேக்கி வைத்து பாத்திரத்துக்கு உயிரூட்டிய சிவகுமார் ஜெயராமன்; தனது யதார்த்தமான நடிப்பு, அநாயாசமாக உதிர்த்த கமெண்டுகளின் மூலம் கைதட்டல்களை அள்ளிச்சென்ற 'பாட்டி' ரேவதி சீதாராமா; கதாநாயகனின் நண்பனாக வரும் நந்தாவின் (பாலாஜி நடராஜன்) இயல்பான நகைச்சுவை; சோழியூர் சொக்கலிங்கமாக வரும் கார்த்திகேயன் செல்லதுரையின் அட்டகாச மான வட்டாரப் பேச்சு; டீவி தொடர் பைத்தியமாக வரும் ஜெயஸ்ரீ மணி; கதாநாயகன், நாயகி பாத்திரங்களைச் செம்மையாகச் செய்த முனீஷ் சிவகுருநாத் மற்றும் ப்ரீதி பிச்சை; பொதுமேலாளர் பாத்திரத்துக்கே உரிய தோரணையுடன், கணீர் குரலுடன் வந்த திருமுடி துளசிராமன்; கதாநாயகனின் தாயாக வந்த கனகா குருபிரசாத்; அமெரிக்க தம்பதிகளாக வரும் திவ்யா மற்றும் கிஷோர்; நீதிபதியாக சாய்; அரவிந்தனாக ஜிகே, விருந்தாளியாக ஆனந்த் ரங்கராஜன் என்று எல்லாப் பாத்திரங்களும் இந்த நாடகத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.

ஆனாலும், இரண்டு அம்சங்கள் சரி செய்யப்படலாம். ஒன்று: ஒலி அமைப்பு. கடைசி சில வரிசைகளில் இருந்தவர்கள் ஆடியோ கேட்கவில்லை என்று அடிக்கடி குரல் கொடுத்ததைக் கேட்க முடிந்தது. இரண்டு: நாடகத்தின் நீளம். அதைக் குறைத்திருந்தால், விறுவிறுப்புக் கூடியிருக்கும். நினைத்தாலே நடக்கும் என்ற தலைப்புக்கு ஏற்றவாறு கதையில் முக்கிய திருப்பங்களைப் பார்வையாளர்கள் நினைத்த விதத்திலேயே நடத்தியிருப்பது பாராட்ட வேண்டிய அம்சம்.

மேடை அலங்காரம், ஒப்பனை, ஒலி-ஒளி நிர்வாகம் என்று இந்த நாடகத்தின் அனைத்து அம்சங்களையும் திறம்படக் கொண்டு செலுத்தியிருக்கும் இந்தக் கலைஞர்கள் எல்லாம் முழுநேரக் கலைஞர் கள் அல்லர். ஆனால், நாடகம் முழுதிலும் தொழில்முறை நேர்த்தி அழுத்தமாகக் காணப்படுவது இவர்களது கடின உழைப்புக் கும் அர்ப்பணிப்புக்கும் அடையாளம். கலகலப்பாக, ஜனரஞ்சகமாக, விறுவிறுப்பாக நாடகத்தை எழுதி இயக்கியுள்ளார் மணிராம். 'அவதார்ஸ்' குழுவுக்கு இது ஒரு நல்ல ஆரம்பம்தான்.

சுந்தரேஷ்
More

ஸ்ரீகிருபா நடனக் குழுமம் பார்ஸலோனாவில் பரிசு வென்றது
சித்திரை கொண்டாட்டம் : வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்
பெர்க்கலி தமிழ்ப்பீடம் 'கலைஞர் களஞ்சியம்' வெளியீட்டு விழா
தமிழ் புத்தாண்டு விழா : சிகாகோ தமிழ்ச் சங்கம்
தமிழ்ப் புத்தாண்டு விழா டெலவர் பெருநிலப் பள்ளத்தாக்கு தமிழ்ச் சங்கம்
தமிழ் புத்தாண்டு விழா : கொலராடோ தமிழ்ச் சங்கம்
தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம்
நியூ ஹாம்ப்ஷயர் இந்திய சங்கம் (IANH) கல்விப் போட்டிகள்
வேதாத்திரிய வேள்வி தினம்
Share: 




© Copyright 2020 Tamilonline