Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நலம்வாழ | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
சிவன் ·பைன் ஆர்ட்ஸ் அகாடமி நடத்தும் பிரம்மஸ்ரீ பாபநாசம் சிவன் விழா
லேர்ன்க்வெஸ்ட் வழங்கும் இந்திய செவ்வியல் இசை மாநாடு
டெலவர் வேலி பெருநிலத் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
பெர்க்கலி பல்கலைக் கழகத் தமிழ் மாநாடு 'ஆறு'
உதவும் கரங்கள் வழங்கும் 'கலாட்டா-2008'
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைவின் 'தமிழ் விழா 2008'
- |ஏப்ரல் 2008|
Share:
Click Here Enlarge2008 ஜூலை 3 முதல் 6 வரை, வட அமெரிக்கத் தமிழ்ப் பேரவை (FeTNA) 'தமிழ் விழா 2008'ஐக் கொண்டாட இருக்கிறது. இது தமிழறிஞர் பெரியசாமித்தூரன் (பார்க்க இந்த இதழின் 'முன்னோடி') நூற்றாண்டு விழாவாகவும், தமிழின விழாவாகவும் அமைய விருக்கிறது. விழா நடக்கப் போகுமிடம்: Bob Car Performance Arts Center, Orlando, Florida, USA.

இந்த மாபெரும் தமிழ்க் கொண்டாட்டத்திற்கு வருகை தரவிருக்கும் கலைஞர்கள் மற்றும் அறிஞர்கள்: ‘புரட்சி நடிகர்’ சத்யராஜ், ‘மக்கள் இயக்குநர்’ தங்கர் பச்சான், ‘சன் டிவி' புகழ் ஈரோடு மகேஷ், ‘தமிழிசை அறிஞர்’ மதுரை மம்மது, ‘கலைமாமணி’ சுதா ரகுநாதன், ‘புரட்சி இயக்குநர்’ சீமான், பேரா. சுப. வீரபாண்டியன்.

‘கலைமாமணி’ நர்த்தகி நடராஜ் ‘சிலப்பதி காரம்’ என்ற நாட்டிய நாடகத்தை வழங்கு வார்கள். தமிழ் திரையுலகப் பாடகர்கள் நரேஷ் அய்யர், கிரிஷ் ஆகியோர் அய்ங்கரன் இசைக் குழுவினருடன் இணைந்து திரை யிசைப் பாடல்களை வழங்குவார்கள். ‘இனி, தமிழ் வளர்வது: தாய்த்தமிழ் மண்ணிலா? வேற்று மண்ணிலா?’ என்ற தலைப்பில் பட்டி மன்றமும், ‘தாயே! தமிழே! வருங்காலம் நின் காலம்’ என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெறும்.

தமிழ் இணைய/வலைப்பதிவு பயிற்சிப் பட்டறை (Bloggers workshop) ஒன்றை இன்·பிட்டும் தமிழ்மணமும் இணைந்து வழங்கும். வேதாத்திரி மகரிஷிகளின் அமைப்பு வழங்கும் யோகா பயிற்சிப் பட்டறை (www.vethathiri.org) உண்டு. தமிழ்த் திருமண அரங்கு, CME, தமிழ்த் தேனி, சிறுவர்களுக் கான பேச்சுப் போட்டி, இளைஞர் அரங்கு, தொழில்முனைவோர் அரங்கு, பல தமிழ்ச் சங்கங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் ஆகியவை யும் இடம்பெறும்.

கவியரங்கம், பட்டிமன்றத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் தொடர்புகொள்ள மின்னஞ்சல்: treasurer@fetna.org.

பேரவை மலருக்குக் கட்டுரை அனுப்ப: fetna.malar@gmail.com
மேலும் விவரங்களுக்கு:

இணையதளம்:www.fetna.org
மின்னஞ்சல்: thillai@sbcglobal.net

விழா ஒருங்கிணைப்பாளர்:

ச. சுப்பிரமணியம் - chrissubra@aol.com 954.675.6883
தில்லை க. குமரன் - thillai@sbcglobal.net 408.857.0181
ஜே தபராஜ் - jaythabaraj@hotmail.com / 813.760.5615
அப்பு ரத்தினவேலு - appu@nova.edu / 954.336.4723
ஜெயா சுவாமி - jlswamy@yahoo.com / 407.971.2741
More

சிவன் ·பைன் ஆர்ட்ஸ் அகாடமி நடத்தும் பிரம்மஸ்ரீ பாபநாசம் சிவன் விழா
லேர்ன்க்வெஸ்ட் வழங்கும் இந்திய செவ்வியல் இசை மாநாடு
டெலவர் வேலி பெருநிலத் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
பெர்க்கலி பல்கலைக் கழகத் தமிழ் மாநாடு 'ஆறு'
உதவும் கரங்கள் வழங்கும் 'கலாட்டா-2008'
Share: 




© Copyright 2020 Tamilonline