Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | தமிழறிவோம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | நூல் அறிமுகம் | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
வளைகுடாப் பகுதி தமிழ்மன்றம் வழங்கும் 'தக்கதிமிதா'
வடகலிபோர்னியா தமிழர் அமைப்பின் கலைவிழா
மித்ரன் தேவநேசன் நடத்தும் நடிப்புப் பட்டறை
- தீபா ராமானுஜம்|அக்டோபர் 2007|
Share:
Click Here Enlargeஇந்திய நாடக உலகின் பிரபல இயக்குநரான மித்ரன் தேவநேசன் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் நடிப்புப் பயிற்சிப் பட்டறை ஒன்றை வளைகுடாப் பகுதியின் புகழ்பெற்ற 'க்ரியா' ஏற்பாடு செய்துள்ளது. இது அக்டோபர் 20, 21 நாட்களில் நடைபெறும்.

முதல் நாள் மாலையில் மித்ரன் தேவநேசன் எழுதி இயக்கிய 'This English' என்ற நாடகம் பயிற்சியாளர்களுக்குக் காணக் கிடைக்கும். நகைச்சுவை நாடகமான இது சென்னையில் 'Madras Players' குழுவினரின் மிக நீண்ட காலம் ஓடிய நாடகம் ஆகும். நாடகம் முடிந்த பின் விருந்து உண்டு.

இந்தியாவின் சிறந்த 3 மேடைநாடக இயக்குநர்களில் ஒருவராக மித்ரன் தேவநேசன் அவர்கள் குறிப்பிடப் பெறுகிறார். லண்டனின் ராயல் ஷேக்ஸ்பியர் கம்பெனியில் பயிற்சி பெற்ற இவர் நாடக இயக்கத்தில் உயர்நிலைப் பயிற்சிகளை லண்டன், பெர்லின், நியூயார்க் ஆகிய இடங்களில் பெற்றார். தவிர பொம்மலாட்டத்திலும் பயிற்சி பெற்றுள்ளார். மேடையைத் துப்புரவு செய்பவராக 'மெட்ராஸ் பிளேயர்ஸ்' குழுவில் சேர்ந்த இவர் ஆங்கில நாடகங்களின் சிறந்த இந்திய இயக்குநர்களில் ஒருவராக ஆனது குறிப்பிடத் தக்கது. தமது 'ஜூலியஸ் சீஸர்' நாடகத்துக்காக முதல் தங்கப் பதக்கத்தை ஜமைகாவில் வென்றார்.

1986-ல் புலிட்ஸர் பரிசு வென்ற 'Shadow Box' நாடகத்தை இயக்கி, நடிப்பில் புதிய பாணி ஒன்றை உருவாக்கினார். இவரது 'Dog's Hamlet', 'Brahma's Hair', 'Arturo Ui', 'Midsummer Night's Dream', 'Seven Steps Around the Fire', 'Dance Like a Man', and 'This English' ஆகியவை இவரது தயாரிப்புகளில் பிரபலமானவை ஆகும்.

பிரெஞ்சுப் படமான 'Blue Mountains' என்பதில் இவர் நடித்திருக்கிறார். 'Gills' என்னும் இத்தாலியப் படத்தில் நடித்துள்ளதோடு, இதன் நடிகர் தேர்வு இயக்கமும் செய்துள்ளார்.

இவர் சென்னை 'ஸ்பாஸ்டிக்ஸ் சொஸைட்டி ஆ·ப் இந்தியா'வை நிறுவியவர்களில் ஒருவர். கார்கில் பகுதிப் போர் வீரர்களிடம் பேசத் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 சென்னைக்காரர்களில் இவர் ஒருவர். சிறுவர் நாடகக் குழு ஒன்றையும் இவர் தொடங்கி நடத்தி வருகிறார்.
அதிக விவரங்களுக்கு:
www.kreacreations.com
http://blog.seedsandflowers.net

நிகழ்ச்சி: மித்ரன் தேவநேசன் நடத்தும் நடிப்பு, குரல்வளப் பயிற்சிப் பட்டறை
நாள்: அக்டோபர் 20 & 21, 2007; நேரம்: காலை 10:00 முதல் 5:00 மணி வரை.
இடம்: Club House, Antelope hills, Ocaso Camino, Fremont
கட்டணம்: ஒருவருக்கு $ 150/- (மதிய உணவு, தேநீர் இதில் அடங்கும்)
'This English' நாடகம் மட்டும் காண விரும்புவோருக்கு $50 மட்டும் (விருந்துக்கும் சேர்த்து)
பட்டறையில் 20 பேர் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுவர். நடிப்பில் தீவிர அக்கறை கொண்டவர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க இறுதிநாள்:
பட்டறைக்கு: அக்டோபர் 5 மாலை 5:00 மணி
'This English' நாடகம் காண: அக்டோபர் 12 மாலை 5:00 மணி
தொடர்புகொள்ள:
Dheepa 510.353.1790 / 408.828.7489;dheepa@kreacreations.com
Naveen 510.435.5034; kreacreations@yahoo.com

தீபா ராமானுஜம்
More

வளைகுடாப் பகுதி தமிழ்மன்றம் வழங்கும் 'தக்கதிமிதா'
வடகலிபோர்னியா தமிழர் அமைப்பின் கலைவிழா
Share: 




© Copyright 2020 Tamilonline