Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | சமயம் | Events Calendar | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
வாராயோ வசந்தமே!!
நந்தலாலா மிஷன் சிறுவர்கள் விழா!
லலிதகான வித்யாலயா 10 ஆவது ஆண்டு விழா
பாரதி கலாலயாவின் ஒரு நாள் நிகழ்ச்சி!
ஸ்ரீ கிருபா டான்ஸ் கம்பெனியின் புதிய ஸ்டூடியோ
தமிழ் இணைய மாநாடு 2002 சான் ·பிரான்சிஸ்கோவுக்கு வருகிறது!
- |ஏப்ரல் 2002|
Share:
Click Here Enlargeகணினியிலும் (computer) இணையத்திலும் (internet) திறமையுடன் பணியாற்றி வரும் நம்மில் பலர், இந்த இரு துறைகளாலும் அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ந்திருப்பதை நன்கு அறிவோம். தமிழிலும், தமிழ் பேசும் நல்லுல கெங்கும் அதே போன்ற வளர்ச்சி வேண்டும் என்ற நோக்கோடு உலகத் தமிழர்கள் ஒருங்கிணைந்து உத்தமம் ( உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் INFITT ) என்ற அமைப்பைச் சிங்கப்பூரில் நடந்த உலகத் தமிழ் இணைய மாநாடு - 2000-இல் உருவாக்கினர். சென்ற ஆண்டு இந்த மாநாடு கோலாலம்பூரில் நடந்தது. சிங்கப்பூரிலும், கோ¡லாலம்பூரிலும், அமெரிக்காவின் காம்டெக்சுக்கு (Comdex) இணையாக நடந்த கண்காட்சிகளில் பல தமிழ் மென்பொருட்களையும், கருவிக¨ளையும் காட்சிக்கு வைத்திருந்தனர். இந்தக் கண்காட்சி 50,000 -க்கும் மேற்பட்ட தமிழர்களால் வரவேற்கப்பட்டது.

தமிழில் கணினி மற்றும் இணையத் தொழில் நுட்பங்களை முன்னேற்றும் நோக்கோடு நடை பெறும் இந்த மாநாடு, வரும் செப்டம்பர்-அக்டோபர் இலையுதிர்காலத்தில் சான் ·பிரான்சிஸ்கோ பகுதியில் நடைபெற உள்ளது. நீங்கள் நினைத்தால் மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுரை படைக்கலாம்; மாநாடு மற்றும் கண்காட்சி அமைப்பாளர்களோடு தோள் கொடுத்து உழைக்கலாம்; உங்கள் நண்பர் களிடையே இந்தச் செய்தியைப் பரப்பலாம். "நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!"
தமிழ் இணையம் - 2002 மாநாடு வட அமெரிக்கத் தமிழர்கள் தம்மிடையே கணினித் தமிழையும், இணையத் தமிழையும் பரப்பவும், இணையத் தமிழில் புதிய சாதனைகள் படைக்கவும், தமிழ் மின்வணிக முயற்சிகளுக்கு அடிகோலவும் அமையும் நல்ல வாய்ப்பாக அமையும். புலம்பெயர்ந்து வாழும் தமிழர் களுக்கே உரித்தான சிக்கல்களுக்குத் தீர்வு காணவும், வட அமெரிக்கத் தமிழர்களின் திறமைகளை ஒருங்கிணைத்துத் தமிழ் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தவும் வரும் இந்த அரிய வாய்ப்பைத் தவற விடாதீர்கள். தகவல் தொழில் நுட்பத்துறையில் உள்ள தமிழர்கள் மட்டுமல்லாது, எல்லாத் தமிழர்களை யும் ஈர்க்கும் மாநாடாக இது அமைய வேண்டும்.

வரும் தமிழ் இணைய மாநாட்டில் பங்கேற்கவும் தொண்டு புரியவும் விழையும் வட அமெரிக்கத் தமிழர்கள் மாநாட்டு அமைப்பாளர் மணி மு. மணிவண்ணனை mmanivannan@earthlink.net என்ற மின்னஞ்சல் முகவரியில் அணுகுங்கள்.
More

வாராயோ வசந்தமே!!
நந்தலாலா மிஷன் சிறுவர்கள் விழா!
லலிதகான வித்யாலயா 10 ஆவது ஆண்டு விழா
பாரதி கலாலயாவின் ஒரு நாள் நிகழ்ச்சி!
ஸ்ரீ கிருபா டான்ஸ் கம்பெனியின் புதிய ஸ்டூடியோ
Share: 




© Copyright 2020 Tamilonline