Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | தமிழக அரசியல் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது | கவிதைப்பந்தல் | சமயம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சுண்டி இழுத்த சொற்பொழிவு!
தமிழர் பெருவிழா அமெரிக்காவில்!
ஏரிக்கரையில் இசைவிழா
கலி·போர்னியா முத்தமிழ் சங்கம் - தமிழ் புத்தாண்டு கலைநிகழ்ச்சி
- |மே 2002|
Share:
Click Here Enlargeமுத்தமிழும் முத்தமிடும் கலி·போர்னியா முத்தமிழ் சங்கத்தின் தமிழ்ப்புத்தாண்டு கலை நிகழ்ச்சி ஏப்ரல் 20-ஆம் நாள், லாஸ் ஏஞ்சலிஸிலுள்ள 'நோர்வாக்' நகரத்தில் 'சனாத்தன் தர்மா' கோயில் அரங்கத்தில் நடந்தேறியது. மாலை 5 மணிக்குத் தொடங்கி எதிர்பாராத அளவுக்கு இரசிகப்பெருமக்கள் கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கினர். முதலில் வயிற்றுக்கு உணவு. சங்கத்தின் இயல், இசை, நாடக கதம்ப நிகழ்ச்சிகள் இரசிகர்களின் வயிற்றுப் பசியை மறக்கச் செய்துவிட்டது. விழா நிகழ்ச்சிகளை மிகவும் அழகாக தொகுத்தளித்த திரு. சங்கர், திருமதி சுஜாதா சேகர் இருவரும் சபையோரின் அமோகமான பாராட்டைப் பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் ஏனைய தமிழ்ச் சங்கங்களும் வேற்றுமை கருதாமல் ஒற்றுமையுடன் பங்குபெற்று, விழாவை சிறப்பித்து குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

பாரதியார் பாடலுக்கு திருமதி. ரோஸ் முரளி கிருஷ்ணன் இசையமைத்துப் பாடியது, தேனுஷ்யா, ப்ரியங்கா விக்னேஷ்வரன் சகோதரிகள் பாடிய தமித்தாய் வாழ்த்துப்பாடலுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகியது.

திருமதி. உமா ராமதுரை, திருமதி. லதா சங்கர், குழுவினர் வழங்கிய பஞ்ச தந்திர நடனம், நாட்டியக் கதம்பம், மற்றும் ஒத்த ரூபா பல்சுவை நடனம் இரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டது.

திரு.ஹரி, திரு. பாலு குழுவினர் வழங்கிய விடியலுக்கோ, பூபாளம், ஓ பாரதா, சத்ரபதி சிவாஜி ஆகிய நிகழ்ச்சிகளை சபையோர் பலத்த கைதட்டலுடன் பாராட்டினார்கள்.
இதைத்தவிர, சண்டியோ கோ தமிழ்ச்சங்க அங்கத்தினர் வழங்கிய 'நாடகப்பிரியாவின்' 'குறும்பு' நாடக கதா காலட்சேபம், 'கலாஞ்சலி வழங்கிய கலி·போர்னியா வைபோகமே'' ஆகிய நிகழ்ச்சி களும் சபையோரின் பலத்த பாராட்டை பெற்றன.

இதைத்தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இன்னிசை விருந்து ஆரம்பமாகியது. உள்ளூர் கலைஞர்கள் திரு. பாலாஜி, திரு. முரளி, திரு. குமாரதுங்கம், திரு (கலாநிதி) வெங்கட், திருமதி. உமா, செல்விகள். ஐஷ்வர்யா, சுரபி ஆகியோர் பாடல்களை இனிமையான குரலில் பாட, இசைக்கலைஞர் திரு. ராஜ்குமார் அவர்கள் அத்தனை பாடல்களுக்கும் இரசனையோடு சலிபபின்றி பின்னணி மெட்டிசைத்து சபையோரை மெய்மறக்கப் பண்ணினார்.

பரிசுக் குலுக்கலில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வதுங்கப்பட்டன. அதன் பின்னர் கலி·போர்னியா முத்தம்ழ் சங்கத்தின் அங்கத்தவர்களின் நன்றிரையுடன் தமிழ் புத்தாண்டு விழா இனிதே நிறைவுற்றது.

சங்கத்துடன் தொடர்பு கொள்ள விரும்புகிறவர்கள் மின் அஞ்சல் மூலமாகவோ, தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.
More

சுண்டி இழுத்த சொற்பொழிவு!
தமிழர் பெருவிழா அமெரிக்காவில்!
ஏரிக்கரையில் இசைவிழா
Share: 




© Copyright 2020 Tamilonline