Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது
மகளிர் வாழ்க்கையில் மறுமலர்ச்சி
கொத்தவால் சாவடி பாட்டு
அமெரிக்க க(¡)ண்டம்
அட்லாண்டா பக்கம்
அட்லாண்டாவில் கேட்டவை
மூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன்
கீதாபென்னெட் பக்கம்
ஓம் சரவண பவா
- அட்லாண்டா கணேஷ்|ஆகஸ்டு 2002|
Share:
சமையல் கலையில் வல்லவர்கள் ஆணா? பெண்ணா? என்று ஒரு கேள்வியைக் கேட்டால் பதில் முக்கால் வாசி "இதில் என்ன சந்தேகம், நிச்சயம் பெண்கள் தான்" என்றும் கால்வாசி பேர்கள் "நளன் ஆண் தானே? அதனால் ஆண்கள் தான் வல்லவர்கள்" என்றும் சொல்லலாம். ஆனால் இப்போது அமெரிக்காவில் நமது தாய்க்குலம் பல நளன்களை உருவாக்கி வருகிறார்கள், வேலைக்குப் போகும் இருவரும் வீட்டு வேலைகளை சரிசமமாகச் செய்ய வேண்டும் என்று. அது உண்மைதான் என்று நிரூபிப்பதுபோல எங்கள் அட்லாண்டாவில் இரு வல்லவர்கள் அருமையாக, அட்டகாசமாக, தென்னிந்திய அருசுவை உணவை அட்லாண்டா வாசிகளுக்கு அள்ளி அள்ளி வழங்குகிறார்கள். நிச்சயம் இவர்களுக்கு மாக்ஸிம் ஸ்டார் கொடுக்கலாம் இவர்களின் உணவின் தரத்தை வைத்து.

யார் இந்த இருவர்? மெட்ராஸ் சரவண பவன் என்ற உடனே "புரிகிறது சென்னைவாசிகள் தானே" என்று நீங்கல் கேட்டால் உடனே சென்னை ஆட்கள் மட்டும் தான் நன்றாக இட்லி, தோசை, வடை செய் வார்களா? மற்றவர்கள் என்ன ஒன்றும் தெரியாதவர் களா? என்று சண்டைக்கு வரலாம் அந்த இருவரும், ஏனெனில் அவர்களில் ஒருவர் குஜராத்தில் உள்ள ஆனந்த் என்ற இடத்திலிருந்தும், மற்றவர் கர்நாடகாவில் உள்ள பெங்களூரிலிருந்தும் பல வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் குடியேறிய வர்கள் .

சரி, சரி போதுமைய்யா உன் சஸ்பென்ஸ் என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது, ஓ.கே, ஓ.கே கோபம் வேண்டாம், அவர்கள் தான் திரு. நரேந்திர படேலும் திரு. ராம் நஞ்சுண்டாவும் மெட்ராஸ் சரவண பவனின் உரிமையாளர்கள். நரேந்திரன் மும்பையில் கேடரிங் டெக்னாலஜி படித்துவிட்டு 1993, நியூயார்க் வந்து ஒரு இந்தியன் ரெஸ்டாரண்ட்டில் சேர்ந்து, அங்கே ராம் நஞ் சுண்டாவும் வேலைப் பார்த்துக் கொண்டிருந்ததால் இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.

நரேந்திரன் திருமணம் செய்துகொண்டு அட் லாண்டாவில் குடியேறிய பிறகு அவர் செய்த முதல் வேலை ஒரு வருடத்திற்கு பேப்பர் ரிஸர்ச் லாபில் அஸிஸ்டெண்டாக, ஒரு வேளை அங்கேதான் பேப்பர் மசாலா தோசை செய்வது பற்றி சிந்தித்தாரோ? பிறகு அதை விட்டு விட்டு மறுபடியும் சமையலில் புகுந்தது தனிக் கதை.

ராம் நஞ்சுண்டா சைக்கிளிலே உலகம் சுற்றிய வாலிபர். கர்நாடகாவில் இருந்து இவரும் இன் னொருவரும் பல கம்பெனிகள் ஸ்பான்சர் செய்ய நல்லவிதமாக பல நாடுகளைச் சுற்றிவிட்டு நியூயார்க் மான்ஹாட்டன் வரை வந்துவிட்டனர். பாவம் அவ்வளவு தூரம் சைக்கிளை மிதித்து வந்தால் களைப்பாக இருக்காதா? களைப்புத் தீர இருவரும் தூங்கி எழுந்துப் பார்த்தால் சைக்கிள்களைக் காணவில்லையாம், பாவம் அதனால் வாழ்க்கை சைக்கிள் மாறிவிட்டது. திரும்பிப் போக வாகனம் ஏது இல்லாததால், வந்தாரை வாழவைக்கும் நியூயார்க் நகரிலே தங்கி விட்டாராம் இந்தியன் ரெஸ்டா ரெண்டில் வேலை எடுத்துக்கொண்டு. என்ன வேலை குக் ஆகவா? இல்லை குக் அசிஸ்டெண்டாக, ஏனெனில் அப்போது அவருக்கு சாப்பிட மட்டும் தான் தெரியும் சமைக்கத் தெரியாது. சென்னையில் பாண்ட்ஸ் கம்பெனியில் கிரேன் ஆபரேடராக இருந்தவருக்கு சமையல் எப்படித் தெரியும்?

ஆமாம் சமைக்கத் தெரியாது. ஆனால் பல சமைக்கத் தெரியாதவர்கள் தெரியும், தெரியும் என்று கூறி ஓட்டலில் சேர்ந்து சமைத்ததைச் சாப்பிட்டு இந்த "தப்பை" நாம் செய்யக் கூடாது என்று முடிவு எடுத்து குக் அசிஸ்டெண்டாக கிடைத்த வேலையில் முழு கவனம் செலுத்தி நான்கு ஐந்து வருடங்கள் கிச்சனில் புகுந்து விளையாடி அருமையாக சமைக்கக் கற்றுக்கொண்டு, அங்கு இருந்த chief வேலையை விட்டுச் சொந்தத் தொழில் தொடங்க இவர் chief ஆகி மற்றவர்களையும் நன்றாக ட்ரையின் பண்ண ஆரம்பித்துவிட்டார். நளனின் அருள் பார்வை இவருக்கு நிச்சயம் உண்டு.

இதில் வேடிக்கை என்னவென்றால் MSBல் கேடரிங் டெக். படித்த நரேந்திரன் நிர்வாகத்தையும், குக் அசிஸ்டெண்டாக இருந்து அனுபவம் பெற்று கைதேர்ந்த சமையல்காரராக ஆன ராம் சமையல் டிபார்ட்மெண்டையும் திறம்பட கவனிக்கிறார்கள். நரேந்திரனும் அருமையான குக், சவுத் இந்தியன் ஐட்டம்களைச் செய்து அசத்திவிடுவார். இதற் காகவே முதலில் அசிஸ்டெண்ட் குக் ஆக மெட்ராஸ் க·பேயில் வேலைக்குச் சேர்ந்து அதை நடத்திய சென்னை ஓனர்களிடம் நல்லா ட்ரைனிங் எடுத்து குருவிற்கு மிஞ்சிய சிஷ்யனாகி அந்த மெட்ராஸ் க·பேயை விலைக்கு வாங்கிவிட்டார் ராம் நஞ்சுண்டா பார்ட்னர்ஷிப்போடு. இருந்தாலும் பொது மக்களின் நன்மை கருதி நிர்வாகம், பணம் சம்பந்தப்பட்ட வேலைகளைக் கவனிக்கிறார். எப்படி இருந்தால் என்ன இருவரு அந்த இரு டிபார்ட் மெண்டையும் நன்கு திற்மபட நிர்வகித்து, வரும் கஸ்டமர்களைக் கவர்ந்து கல்லாவை நிரப்பு கிறார்கள்.

அட்லாண்டாவில் இன்று 40 இந்தியன் ரெஸ்டா ரண்ட்ஸ்க்கு மேலே இருப்பதாகக் கேள்வி. 95% வெஜ் & நான். வெஜ். தான். ஐந்தே ஐந்து தான் 100% வெஜிடேரியன். இந்த 40 இந்திய ரெஸ்டாரண்ட் களில் நம்பர் 1 வியாபாரத்தில் MSB தான். வெஜ் & நான் வெஜ் இருந்தால் தான் ஓரளவாவது வியாபாரம் ஓடும் இல்லையேல் நிறைய பேர் வரமாட்டார்கள் என்ற எண்ணத்தைத் தகர்த்து எறிந்துவிட்டார்கள். தரம் இருந்தால் நிச்சயம் கூட்டம் வரும் என்று நிரூபித்துவிட்டார்கள். இவர்கள் வியாபாரத்தைப் பார்த்து பல வெளியூர் இந்தியர்கள் இந்த MSBயை அவர்கள் ஊர்களில் ஆரம்பிக்க நினைக்கிறார்கள் ஆகவே இவர்கள் இதை ஒரு Franchise பிஸினெஸாக செய்ய எல்லா முயற்சிகளும் செய்து கொண்டிருக் கிறார்கள். உங்கள் ஊரிலும் கூடிய விரைவில் MSB வரலாம்.

எப்போது இங்கே போனாலும் தேர் கூட்டம் திருவிழா கூட்டம் தான். ரசித்து ருசித்து சாப்பிட ஆசைப்படுகிறவர்கள் நேரத்தைப் பற்றிக் கவலைப் படக்கூடாது ஏனெனில் MSBயில் சீட் கிடைக்க குறைந்தது அரை மணி காத்திருக்கவேண்டும். அரை மணி காத்திருக்க வேண்டுமா? என்று கேட்பவர் களுக்கு உள்ளே போய் அந்த நல்ல உணவை சாப்பிட்ட பிறகு தான் இதற்கு ஒரு மணி நேரம் காத்திருந்தாலும் தப்பில்லை என்ற பதில் மனதில் வரும். ஆகவே அவசர வேலை இருப்பவர்கள் பக்கதிலேயே இருக்கும் ஏதாவது fast foodல் சாப்பிட்டுவிட்டுப் போங்கள், பாவம் உங்கள் தலை எழுத்தை எங்களால் மாற்றமுடியாது. அடடா மறந்துவிட்டேனே உங்களைப் போன்ற அவசரக்காரர் களுக்கு என்று லஞ்ச் ப·பே ரீசெண்டாக ஆரம்பித்து இருக்கிறார்கள். பார்த்தாலே பசி தீரும். கிட்டத் தட்ட 14 ஐட்டம்கள் உங்கள் பசிக்கு (சக்திக்கு) தகுந்தபடி எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். மதியம் வேலைக்குப் போகிறவர்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். உண்ட களைப்புத் தொண்ட னுக்கும் உண்டல்லவா. (என்னைப் போல குண்டர்களுக்கு வேலை இல்லாததால் பிரச்சனை இல்லை). $6.99 கொடுத்துவிட்டு எதை வேண்டுமா னாலும் அள்ளி அள்ளி சாப்பிடலாம். சூடாக தோசை வேறு கொண்டு வந்து இருக்கும் இடத
்திலேயே கொடுக்கிறார்கள். ஆசை யாரை விட்டது அதையும் ரசித்து உள்ளே தள்ளி விடுகிறோம்.
எல்லா ஐட்டம்களும் முக்கியமாக இட்லி, வடை, தோசை, பொங்கல், மசாலா தோசை, சாம்பார் வடை, அவியல், எல்லாவற்றையும் இந்தியர் மட்டு மல்ல அமெரிக்கர்களும் விரும்பி சாப்பிடுகின்றனர். MSBக்கு வருபவர்களில் 30% மற்ற நாட்டுக்காரர்கள். நமது சவுத் இந்தியன் உணவு வகைகளை MSB நிச்சயமாக பரபரப்பாக வெளிநாட்டினர்க்கு அறிமுகப்படுத்துகிறது அட்லாண்டாவில். (சரி சரி, நாம் தான் வெளிநாட்டுக்காரர்கள் அவர்கள் உள்நாட்டுக்காரர்கள். மன்னிக்கவும்).

நரேந்திர படேலுக்கு சவுத் இந்தியன் உணவு வகைகளில் எப்படி நாட்டம் வந்தது? ஒரு வேளை அவர் மனைவி சோனல் படேல் சென்னையில் பிறந்தவர் என்பதாலோ? இவரும் ராமன் இருக்கும் இடம் சீதைக்கு அயோத்தி என்று MSBயில் கூடவே இருந்து வரும் கஸ்டமர்களை நன்கு உபசரித்து பிஸினெஸ் மேலும் மேலும் வளர உறுதுணையாக இருக்கிறார். பாராட்டுகள். ஒரு குஜராத்தி, மஹாராஷ்ட்ராவில் வளர்ந்தவர் நமது தென்னிந்திய இட்லி, வடை, தோசையை அருமையாக சமைக்கக் கற்றுக்கொண்டு பணத்தையும் முதல் போட்டு தைரியமாக எப்படி ஒரு மெட்ராஸ் க·பேயை வாங்கி 3 வருடத்திற்குள் தனது உணவு தரத்தின் மூலமும் நியாயமான விலை வைத்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்து "இங்கே இவ்வளவு கூட்டமா? எப்போது போனாலும் ·புல்லாக இருக்கிறது என்ன செய்வது" என்று வாடிக்கையாளர்களும் இவரும் கவலைப்பட ஆரம்பித்தபோதுதான் இன்னும் பெரிய இடமாக மாறவேண்டும் என்று முடிவு எடுத்து நல்ல ஒரு பெரிய இடத்தைப் பிடித்து இன்று MSBயில் 150 பேருக்கு மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்து சாப்பிடலாம்.

ஆரம்பித்து ஒன்பது மாதங்கள் தான் ஆகிறது இருந்தபோதும் இங்கும் அடிக்கடி "ஹவுஸ் ·புல்" ஆகி, வரும் வாடிக்கையாளர்கள் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. உள்ளே பார்த்துப் பார்த்து இண்டீரியர் டெகரேஷன் செய்துள்ளனர். அழகான ரம்மியமான தோற்றம், அன்பான உபசரிப்பு. இனிமையான தமிழ் & ஹிந்திப் படப் பாடல்கள். அங்கு வேலை செய்யும் எல்லோரும் நன்கு புரிந்து வைத்திருக்கின்றனர் ஒரு விஷயத்தை. அதுதான் "சுத்தம் சோறு போடும்" என்பதை. MSBயின் சுத்தத்தைப் பற்றி சத்தமாகச் சொல்லலாம்.

அது சரி ஏன் இந்தப் பெயர் மாற்றம் அதுவும் ஒரு வெற்றியைக் கொடுத்த பெயரான மெட்ராஸ் க·பேயிலிருந்து மெட்ராஸ் சரவண பவன் என்று?

அதற்கு அருமையான காரணம் ஒன்று கூறினார்கள். பார்ட்னர் ராம் நஞ்சுண்டா பெரிய முருக பக்தராம், நரேந்திரன் கணேசன் பக்தராம், இருவரும் சில வருடங்களாக பிசினெஸ் பார்ட்னர்கள். அண்ணன் பெயரை வைத்தால் தம்பி கோபித்துக்கொண்டு பழனிக்கு போய்விடப் போகிறாரே என்று தம்பி முருகன் பெயரை வைத்துவிட்டார்களாம். (பிள்ளை யாரிடம் ஞானப் பழத்தைக் கொடுத்து முருகன் கோபித்து பழனியில் ஆண்டியானது எல்லோரும் அறிந்த கதை தானே). முருக பக்தர் ராம் இந்த பெயரை முன்மொழிய பிள்ளையார் பக்தர் நரேந்திரன் அதை வழி மொழிந்து ஓ.கே சொல்லிவிட்டாராம். இந்த வியாபார வெற்றிக்குக் காரணம் கேட்டால் இருவரும் ஒருமித்த குரலில் இது எங்கள் "டீம் ஒர்க்"ன் வெற்றி இங்கு வேலை செய்யும் எல்லோரும் தான் அதற்குப் பொறுப்பு நாங்கள் எங்களது சிறிய பங்கைச் செய்கிறோம் என்று அடக்கத்துடன் அடி மனதிலிருந்து கூறினார்கள். இவர்கள் இருவரும் ஒற்றுமையாக இன்று போல் என்றும் இருந்து MSBயை பல ஊர்களில் கிளைகள் ஆரம்பித்து சீரும் சிறப்புமாக இருக்கவேண்டும் என்று உங்கள் சார்பிலும் எங்கள் சார்பிலும் வாழ்த்துகிறோம். வாழ்க! வளர்க!

ஆகவே அட்லாண்டா பக்கம் வந்தால் நிச்சயமாக MSBயை மிஸ் பண்ணிவிடாதீர்கள். நிச்சயம் மனதார.. சாரி... வயிறார அவர்களை வாழ்த்துவீர்கள்.

நன்றி

அட்லாண்டா கணேஷ்.

பின் குறிப்பு:

என்னைய்யா அட்லாண்டாவில் பார்க்கவேண்டிய முக்கிய இடங்களைப் பற்றி எழுதுகிறேன் என்று கூறி சாப்பாட்டு ஓட்டலைப் பற்றி எழுதியிருக்கிறேயே? நீ என்ன ஒரு சாப்பாட்டு ராமனா? என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. இதற்காக என் தாழ்மையான பதில் "பசியுடன் எப்படி ஊர் சுற்றுவது? மயக்கம் வந்துவிடாதா? ஆகவே இங்கு வந்தேன். இப்போது நன்றாக சாப்பிட்டாகிவிட்டது (அதுவும் ஓசியில். இதெல்லாம் பத்திரிகைகாரர்களுக்கு ஒரு சீப் த்ரில்) சாப்பாடு மிக நன்றாக இருந்ததால் கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டுவிட்டேன் (இரண்டே இரண்டு ·புல் மசாலா தோசை, ஒரே ஒரு அடை அவியல், 4 வடை மட்டும் தான் கூட 2 பூரியுடன்) வயிறு பலூன் போல ஆகிவிட்டது இப்போது எப்படி ஊர் சுற்றுவது நல்லா தூக்கம் வருகிறதே. அதனால் ஒரு நான்கு வார இடைவெளி விட்டு அடுத்த இதழில் பார்க்கவேண்டிய இடங்கள் வரும்.
More

மகளிர் வாழ்க்கையில் மறுமலர்ச்சி
கொத்தவால் சாவடி பாட்டு
அமெரிக்க க(¡)ண்டம்
அட்லாண்டா பக்கம்
அட்லாண்டாவில் கேட்டவை
மூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன்
கீதாபென்னெட் பக்கம்
Share: 
© Copyright 2020 Tamilonline