Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | புதிரா? புரியுமா?
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சிகாகோவில் பாம்பே ஜெயஸ்ரீ
சிகாகோவில் தேனிசை மழை
வெங்கட் சாமிநாதனுக்குக் கனடாவில் இயல் விருது
விதா சாரங்காவின் நடன அரங்கேற்றம்
SIFA-வின் வெள்ளிவிழா
கலிஃபோர்னியா தமிழ்க் கழகம்-ஆண்டு விழா 2004
சாந்தி - ஓர் அமைதிப் பயணம்: பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி
பத்ரிகாஸ்ரமத்தின் இருபதாவது ஆண்டுவிழா
சான் ஹோசேயில்...
நியூயார்க்கில் தமிழ்ப் புத்தாண்டு விழா
இந்து சமுதாய மற்றும் கலாசார மையத்தின் நிதியுதவித் திட்டம்
தமிழ்ப்புத்தாண்டு விழாக் கொண்டாட்டங்கள் கனெக்டிகட்
- |ஜூலை 2004|
Share:
Click Here Enlargeகனெக்டிகட் தமிழ்ச் சங்கம் ஏப்ரல் 24, 2004 அன்று மிடில்டௌன் நடுநிலைப் பள்ளியில் தமிழ்ப் புத்தாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது. தொகுப்பாளர்கள் தனியே ஒரு நாடகம்போலத் தொகுத்து நிகழ்ச்சியை வழங்கியது புதுமையாய் அமைந்திருந்தது. ஆடலும் பாடலும் ஆரவாரமாய் புது வருடத்தை வரவேற்றனர். 'நான் யார் தெரியுமா?' என்று சிறுவர் சிறுமியர் நடத்திய மாறுவேடப் போட்டி மிகச் சிறப்பு. பத்துத் தலை இராவணன், சுப்ரமணிய பாரதி, அனுமன், தமிழ் ஆசிரியர், குறவன் குறத்தி - இன்னும் பல வேடங்களில் இந்தியாவை இக்கரைக்குக் கொண்டு வந்த குழந்தை களும் இதைச் சாத்தியமாக்கிய பெற்றோரும் பாராட்டுக்குரியவர்கள்.

'ஓம் நமச்சிவாய' பாடலுக்குப் பரத நாட்டியமும், 'உப்புக் கருவா'டில் கிராமிய மணமும் வலம்வர சினிமா இசைக்குச் சின்னப் பாதங்கள் ஆடின. 'வந்தேன் வந்தேன்' என்று சிறுமியர் ஆடிய நடனப் போட்டி வஞ்சிக்கோட்டை வாலிபனை நினைவுபடுத்தியது. இளைய தலைமுறை யினர் இந்திய தேசிய கீதத்தை முறையான வாத்திய இசையில் வழங்க அரங்கமே எழுந்து நின்று நாட்டுப்பற்றை வெளிப்படுத்தியது. தொடர்ந்து நடந்த மங்கையர் நடனமும், 'பாரிஸ்டர் அரிச்சந்திரன்' நாடகமும் அரங்கத்தை ஆரவாரத்தில் ஆழ்த்தியது. இதற்கிடையே நடந்த கோலப் போட்டி மக்களின் கலையார்வத்தை வெளிப்படுத்தியது. பாதிரியார் கேஸ்பர் ராஜ் இசைஞானி இளையராஜாவின் திருவாசக சிம்பொனி பற்றிச் சிறப்புரை வழங்க இறுதியில் 'த்வனி' குழுவினரின் மெல்லிசையுடன் விழா நிறைவுற்றது.
-
More

சிகாகோவில் பாம்பே ஜெயஸ்ரீ
சிகாகோவில் தேனிசை மழை
வெங்கட் சாமிநாதனுக்குக் கனடாவில் இயல் விருது
விதா சாரங்காவின் நடன அரங்கேற்றம்
SIFA-வின் வெள்ளிவிழா
கலிஃபோர்னியா தமிழ்க் கழகம்-ஆண்டு விழா 2004
சாந்தி - ஓர் அமைதிப் பயணம்: பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி
பத்ரிகாஸ்ரமத்தின் இருபதாவது ஆண்டுவிழா
சான் ஹோசேயில்...
நியூயார்க்கில் தமிழ்ப் புத்தாண்டு விழா
இந்து சமுதாய மற்றும் கலாசார மையத்தின் நிதியுதவித் திட்டம்
Share: 




© Copyright 2020 Tamilonline