Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | புதிரா? புரியுமா?
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
பொது
அமெரிக்காவில் வாழும் முதிய தலைமுறை இந்தியர்
நைஜீரியாவில் மதுபானம் மலிவு
பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு
திருக்குறள் ஆராய்ச்சிக் கட்டுரைக்குப் பரிசு
சத்குரு ஜக்கி வாசுதேவ் அருளுரை
முப்பதாண்டைக் காணும் தமிழ்நாடு அறக்கட்டளை
அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவை
காதில் விழுந்தது...
- நெடுஞ்செவியன்|ஜூலை 2004|
Share:
இந்தியக் கர்நாடக இசையை முறையாய்க் கற்றுக் கொண்ட முதல் கருப்பின மனிதன் என்பதால் எனக்கு ஊக்கமளிப்பார்கள் என்று எண்ணியிருந்தேன். ஆனால் தென்னாப்பிரிக்காவில் எனக்குக் கச்சேரி செய்ய வாய்ப்புகள் அபூர்வம் என்பதில் எனக்கு ஏமாற்றம்தான்.

தென்னாப்பிரிக்க சூலூ பாடகர் பேட்ரிக் எங்கோபோ, பாடகர் கே. ஜே. ஜேசுதாசின் சீடர், பி.பி.சி.யில்.

******


"பயங்கரவாதத் தாக்குதல்களால் அமெரிக்க வாழ்க்கையும் விழுமியங்களும் முற்றிலும் மாறினால், அதைப் பயங்கரவாதிகளின் வெற்றி என்று கொள்ள வேண்டும்" என்று ஏ.பி.சி.யின் சேம் டானால்டுசன் செப்டம்பர் 11க்குப் பின் பத்தே நாட்கள் கழித்து எழுதினார். பாக்தாதில் இருந்து, காபூல், குவாண்டனமோ விரிகுடா வரை நடந்திருக்கும் சிறைக்கைதிச் சித்திரவதை, கற்பழிப்பு, கொலை நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது, வலதுசாரி ஐந்தாம் படையினரின் பாசிசத் தன்மை அம்பலமாகிவிடுகிறது.

கேலிச்சித்திர ஓவியர் டெட் ரால்

******


"நீ ரொம்பக் கருப்பு. நீ தென்னிந்தியப் படங்களில் சேரப் பார்."

தென்னாப்பிரிக்க இந்திய நடிகை ரிவோனா எஸ்ஸாப்பிடம் பாலிவுட் நட்சத்திர வேட்டை நடுவரும், படத்தயாரிப்பாளருமான பூஜா பட் சொன்னது

******


அதிபர் ரானால்டு ரேகனுக்குக்கு விவரங்களின் ஆழமோ, கருத்துகளை அலசும் திறமையோ இல்லை. ஆனால், அற்புதமான சொல்லாற்றல், எளிமைப்படுத்தும் அறிவுக்கூர்மை, தொற்றிக் கொள்ள வைக்கும் நன்னம்பிக்கை இவற்றால் பெரும்பாலும் தான் விரும்பிய திசைக்கு நாட்டையும் உலகையும் அவரால் வழிகாட்ட முடிந்தது. ஒரு ஹங்கேரிய விருந்தினர் சொன்னது போல், அவருக்கு அரசை ஆளத் தெரியாமல் இருந்திருக்கலாம், ஆனால் மக்களுக்குத் தலைமைதாங்கி வழிநடத்திச் செல்லத் தெரிந்திருந்தது.

அமெரிக்க வரலாற்று அறிஞர் ஆர்தர் ஸ்க்லெசிஞ்சர் ஜூனியர், நியூஸ்வீக் இதழில்.

******


"மக்கள் எல்லோரும் படைப்பில் சமம் என்பது அப்பாவுக்கு வெறும் வெற்று வார்த்தைகள் அல்ல, அவர் அப்படித்தான் வாழ்ந்தார். அப்பா வுக்கு ஆழமான, கூச்சப்படாத மத நம்பிக்கை உண்டு. ஆனால், அரசியல் ஆதாயத்துக்காகத் தம் நம்பிக்கையைப் பறைசாற்றிக் கொள்ளும் சில அரசியல்வாதிகளைப் போல அவர் பெரும் பிழை செய்ததில்லை. அதிபரான சமயத்தில் அவர் கிட்டத்தட்ட சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் ஏதோ நல்லது செய்வதற்குத்தான் தன்னைக் கடவுள் காப்பாற்றினார் என்று அவர் நம்பியது உண்மைதான். ஆனால், அதைத் தன் பொறுப்பாக எடுத்துக் கொண்டாரே ஒழியக் கடவுள் தனக்கு வழங்கிய அதிகாரம் என்று எண்ணவில்லை. இந்த இரண்டுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு."

அதிபர் ரானால்டு ரேகன் பற்றி அவரது இளைய மகன் ரான் பிரஸ்காட் ரேகன்.

******


ரானால்டு ரேகன் பனிப்போரில் எங்களைத் தோற்கடித்தாரா? இல்லவே இல்லை. பனிப்போரில் நாங்கள் எல்லோருமே தோற்றுப் போனோம். முக்கியமாக சோவியத் யூனியன். இரண்டு நாடுகளுமே (நாற்பது ஆண்டுகாலப்) பனிப்போரில் பத்து டிரில்லியன் டாலர்களை வீணடித்தோம். பனிப்போர் முடிந்தபோதுதான் இரண்டு நாடுகளுமே வெற்றி பெற்றன.

முன்னாள் சோவியத் யூனியன் பொதுச் செயலாளர் மிக்காயில் கோர்பச்சாவ்

******


நான் உங்கள் மோசமான பயங்களைக் கிளறவில்லை, உங்களின் உயர்ந்த நம்பிக்கைகளை நாடி நின்றேன்; உங்கள் பலவீனங்களல்ல உங்கள் தன்னம்பிக்கையை வேண்டினேன். எனது ஆசையெல்லாம் உங்களில் ஒவ்வொருவரும், குறிப்பாக இளைஞர்கள், நம் நாட்டை நேசிக்க வேண்டும்; அதன் பலத்துக்கோ பணத்துக்கோ அல்ல; அதன் தன்னலமற்ற தன்மைக்கும், இலட்சிய வேட்கைக்கும். ஒவ்வொரு காலையும் அமெரிக்காவுக்குப் புத்துணர்ச்சி அளிக்கட்டும், ஒவ்வொரு மாலையும் நம்மை அந்த மலை மேல் ஒளிரும் நகரத்துக்கு அருகே கொண்டு சேர்க்கட்டும்."

அதிபர் ரானால்டு ரேகன் கல்லறை வாசகத்திலிருந்து (1992 குடியரசுக் கட்சி மாநாட்டு உரை)

******


நான் சின்னப் பிள்ளையாக இருக்கும்போது "சாப்பிட்டு முடி, சீனாவில் எத்தனையோ பேர் பசியால் வாடுகிறார்கள்" என்பார்கள் என் பெற்றோர்கள். இப்போதோ "நீ வீட்டுப் பாடத்தை முடி, உன் வேலையைச் செய்ய எத்தனையோ பேர் சீனாவிலும், இந்தியாவிலும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று என் மகள்களிடம் சொல்ல நினைக்கிறேன்.

நியூயார்க் டைம்ஸ் கட்டுரையாளர் தாமஸ் ·ப்ரீட்மன்

******


பில் கிளின்டனைத் தெரிந்தவர்கள் அவர் முன்னேறுவார் என்று எப்போதுமே எதிர்பார்த்தார் கள்; அதை விட, அவர் முன்னேற வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். இந்த எதிர் பார்ப்புகளை அடைய வசீகரமும், புத்தியும் மட்டுமல்ல, கடுமையான உழைப்பும், வேட்கை யும், உறுதியும், நன்னம்பிக்கையும் தேவை. சொல்லப்போனால், டெக்சாஸ் மாநிலத்தில் போயும் போயும் மக்கவர்னுக்குப் பிரச்சாரம் செய்யத் தன் வாழ்க்கையில் ஆறு மாதத்தை அர்ப்பணித்தவருக்குத் நன்னம்பிக்கைக்கா குறைச்சல்! (சிரிப்பு, கைதட்டல்).

அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ், முன்னாள் அதிபர் கிளின்டன் படத் திறப்பு விழாவில்.

******
ஆங்கிலம் மட்டுமே என்ற இயக்கம், அமெரிக்கர்களாக வேண்டுமென்றால் தங்கள் மூதாதையர் மொழியை விட்டொழிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கிறது. குடிபுகுந்த மக்களின் குழந்தைகளை ஒரு மொழிக்காரர்களாக்கி விட்டுப் பின் அவர்கள் வீட்டு மொழிகளை மொழிபெயர்க்க யாருமே இல்லையே என்று மூக்கால் அழுகிறோம்.

ஜெராக்ஸ் பாலோ ஆல்டோ ஆராய்ச்சி அறிஞர், ஸ்டான்·போர்டு பல்கலைக் கழகப் பேராசியர் ஜெ·ப்ரி நன்பர்க்

******


கம்யூனிசத்தின் வீழ்ச்சிக்கு இவர்தான் காரணம் என்று எந்தத் தலைவரையும் கொண்டாட முடி யாது. ரானால்டு ரேகன் தன் சுற்றைச் சரியாகத் தான் ஆடினார் என்றாலும், ஏனைய இடங்களைப் போலவே கிழக்கு ஐரோப்பாவிலும், வரலாறு அரசியல்வாதிகளுக்கு ஓர் அடி முன்னால்தான் நகர்ந்து கொண்டிருந்தது.

ஆண்ட்றே ஷெண்டே, முன்னாள் கிழக்கு ஐரோப்பியர், கொலம்பியா பல்கலைக்கழகம்

******


"நம்மிடம் ஒரு ஒப்பற்ற சொத்து இருக்கிறது. அதை அருங்காட்சியகங்களில் பூட்டி வைத்து அழிய விட்டு விடக்கூடாது. இது வாழும் கலை. அதைத் தொடர நாம் அரும்பாடு பட வேண்டும்."

பேரா. சேத், ஐ.ஐ.டி., கொலம்பியா மாணவர், பெல் ஆய்வகம், பின்னர் ஐ.ஐ.டி. டெல்லி பேராசிரியர்

******


இந்திய இளைஞர்கள் இந்திய செவ்விசை, நாட்டிய மரபுகளைப் பயில வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி. பி.பி.சி-யில்.

கெவின்: என்ன நான் கேள்விப்பட்டது உண்மைதானா? அந்த ஏழைக் கலிஃபோர்னியாப் பாட்டிங்க கிட்டே இருந்து அடிச்ச கொள்ளைப் பணத்தையெல்லாம் உங்க கிட்டே இருந்து பிடுங்கப் போறாங்களா?

பாப்: ஆமாம். மிலிப் பாட்டி தானே. வண்ணத்துப் பூச்சி ஓட்டுச் சீட்டிலே ஒழுங்கா (அல் கோருக்கு) ஓட்டுப் போடத் தெரியாத மக்குப்பாட்டியே தான்.

கலிஃபோர்னியா மக்களை நையாண்டி செய்த பதிவு செய்யப்பட்ட என்ரான் எரிபொருள் விற்பனையாளர்களின் உரையாடலிலிருந்து

நெடுஞ்செவியன்
More

அமெரிக்காவில் வாழும் முதிய தலைமுறை இந்தியர்
நைஜீரியாவில் மதுபானம் மலிவு
பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு
திருக்குறள் ஆராய்ச்சிக் கட்டுரைக்குப் பரிசு
சத்குரு ஜக்கி வாசுதேவ் அருளுரை
முப்பதாண்டைக் காணும் தமிழ்நாடு அறக்கட்டளை
அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவை
Share: 




© Copyright 2020 Tamilonline