Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | புதிரா? புரியுமா? | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
பொது
அப்துல் கலாமின் 'உதயமாகிறது வலிமைபடைத்த பாரதம்'
சென்னையின் கர்வம
காந்திஜி நினைவுகள்
காந்திஜி காப்பாற்றிய கொத்தடிமைத் தமிழர்
சிலிர்க்க வைத்த சிலப்பதிகாரம்
தூங்காதே ரயிலில் தூங்காதே!
சிந்தனைக்கு - நாமும் நம்மைச் சுற்றியிருப்பவர்களும்....
உண்மையில் நடந்தது
காதில் விழுந்தது...
- நெடுஞ்செவியன்|அக்டோபர் 2004|
Share:
"உங்கள் வண்டி 77 மைல் வேகத்தில் ஓடியதைக் கவனித்ததால்தான் உங்களை நிறுத்துகிறேன். இவ்வளவு வேகமாக நீங்கள் வண்டியை ஓட்டியதற்குச் சட்டப்படி ஏதாவது காரணம் இருக்கிறதா?"

"உம். இல்லை. அவ்வளவு வேகம் கூடியதை நான் உணரவில்லை."

ஓரகன் மாநிலக் காவல் அதிகாரியிடம் முன்னாள் துணை அதிபரும் 2000இல் சில நூறு ஓட்டு வித்தியாசத்தில் அதிபர் தேர்தலில் தோற்றவருமான அல் கோர்.

******


வரலாற்றின் ஒரு முக்கியமான சமயத்தில், உலகமே நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கும் போது, நமக்குக் கிடைத்தவர்களில் ஒருவர் வரலாற்றிலேயே மோசமான அதிபர், இன்னொருவரோ வரலாற்றிலேயே மோசமான வேட்பாளர்! கொண்டாட்டம் தானே?

லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ், ஆசிரியருக்குக் கடிதம்.

******


என்றைக்காவது ஒரு நாள் அமெரிக்க நாடாளுமன்றத்தை ஓர் அணுகுண்டு தகர்க்குமானால், அநேகமாக அதற்குப் பாகிஸ்தானின் தொழில்நுட்பம்தான் காரணமாய் இருக்கும். உலக நாகரீகத்துக் குப் பெரிய எதிர்ப்பு ஓசாமா பின் லாடனிடமிருந்தோ, சத்தாம் ஹ¤சைனிட மிருந்தோ வரவில்லை; அது பாகிஸ்தானின் அணுகுண்டுவின் தந்தை அப்துல் கதீர் கானிடமிருந்துதான் வருகிறது. டாக்டர் கான் அணுகுண்டுத் தொழில்நுட்பத்தை இரான், வட கொரியா, லிபியா மட்டுமல்லா மல் வேறு பல நாடுகளுக்கும் விற்றிருக்கிறார்.

நியூ யார்க் டைம்ஸ், கட்டுரையாளர் நிக்கலஸ் கிரிஸ்டா·ப்

******


திறமையும், அறிவும் நல்லதுதான், ஆனால், விடாமுயற்சியும், கடும் உழைப்பும் நல்ல விளைவுகளைத் தரும் என்ற நம்பிக்கை முக்கியமானது என்கிறார் ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியை ரோஸாபெத் மாஸ் கேன்டர். இது தன்னம்பிக்கையை விட முக்கியமானது. நம்பிக்கை தானாக வருவதல்ல, பிறர் நமக்கு ஊட்டி வளர்ப்பது என்கிறார். நம்பிக்கை மட்டுமல்ல, தோல்வி யும் ஒரு தொற்றுநோய்தான். எதிலாவது நீங்கள் தோல்வியுற்றால், உங்கள் ஏனைய வெற்றிகளை நினைவுகூருங்கள்; என்னென்ன செய்தீர்கள் என்று சிந்தித்து அதைத் திரும்பப் பெற முயலுங்கள். தோல்விகள் தொடர்ந்து வந்தால், நிறைய மனிதத் தொடர்புகளை நாடுங்கள்.

தானாகவே தோல்விச் சங்கிலிகளை உடைப்பது மிகக் கடினம். உங்களுக்கு நம்பிக்கை யூட்ட நண்பரோ, உடன் வேலைசெய்பவரோ கிடைக்காவிட்டால், உங்களால் பிரகாசிக்க முடியக்கூடிய செயலை நாடுங்கள். உங்கள் குழந்தை நூற்றுக்கு நூறு வாங்க முடியாவிட்டாலும் குறைந்தது கணக்குப் பாடத்தில் தோல்வி பெறாமல் இருக்கப் பயிற்சியளியுங்கள். சின்னச் சின்ன வெற்றிகள் பெரும் வெற்றிகளுக்கு வழிவகுக் கின்றன. உங்கள் பிழைகளுக்குப் பொறுப் பேற்றுக் கொள்ளுங்கள். அதனால் பின்னால் பிழைகளைத் தவிர்க்க முடியும். உங்கள் தோல்விகளுக்கு மற்றவர்கள் காரணம் என்று எண்ணுவது உங்களுக்கு நீங்களே குழிபறிப்பது போலாகும்.

ஹார்வர்ட் பேராசிரியை, ரோஸாபெத் மாஸ் கேன்டர் "நம்பிக்கை" என்ற நூலில்

******


(இராக்கில்) நான்கு ஆண்டுகள் கழித்து இரண்டில் ஒன்று நடக்கும் - ஒன்று அமெரிக்கா ஒரு டிரில்லியன் (1000 பில்லியன்) டாலர்கள் செலவழித்த பின்னாலும், 5000 அமெரிக்கப் படைவீரர் களும், எண்ணிலடங்கா இராக்கி மக்களும் இறந்திருப்பார்கள்; ஆனால் இன்றைய நிலையை விட ஒரு முன்னேற்றமும் இருக்காது. அல்லது, அமெரிக்கா இராக்கிலிருந்து வெளியேறியிருக்கும், ஆனால் இராக் பயங்கரவாதிகள் பண்ணையாக மாறி நாம் அடக்கி வைத்திருந்த சத்தாம் ஹ¤சைனின் ஆட்சியிலிருந்ததை விடப் பன்மடங்கு பெரிதாக அச்சுறுத்தும்.

முந்தைய இராக் போரின் திட்டப் பணியாளர், ஓய்வு பெற்ற விமானப் படை கர்னல் மைக் டர்னர், நியூஸ்வீக்

******
இராக் மூலம் அமெரிக்காவுக்கு உடனடி யான ஆபத்து இல்லை, அங்கே பேரழிவு ஆயுதமோ, அல் கைடாவுடன் தொடர் களோ ஏதும் இல்லை என்று தெரிந்திருந் தாலும்கூட இராக்குடன் போர் தொடுத் திருப்பேன் என்றா சொல்கிறார் அதிபர் புஷ்?

அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் ஜான் கெர்ரி

******


அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஒருவர் மக்களாட்சிதரும் நம்பிக்கையையும், பாதுகாப்பையும் விட ஒரு சர்வாதிகாரி தரும் ஆட்டம்காணாத நிலையே மேல் என நினைக்கிறார் என்பதை நம்பவே முடியவில்லை. (ஜான் கெர்ரி) கடந்த டிசம்பரில் "சத்தாம் ஹ¤சைன் ஒழிந்ததால் இராக்குக்கும் உலகுக்கும் நல்லது என்பதைச் சந்தேகிப்பவர்கள், சத்தாமை நாம் பிடித்தது நமக்குப் பாதுகாப்பு என்பதை நம்பாதவர்கள், அமெரிக்காவின் அதிபருக்கு இருக்க வேண்டிய சீர்தூக்கிப் பார்க்கும் திறமையற்றவர்கள்" என்றார். நான் கூட அதைவிட நன்றாகச் சொல்லியிருக்க முடியாது.

அதிபர் ஜோர்ஜ் டப்யா புஷ்

******


சட்டத்தின் ஆட்சியைத் தன் நாட்டில் பறைசாற்றும் ஒவ்வொரு நாடும் வெளிநாடு களிலும் சட்டத்தை மதிக்க வேண்டும். சட்டத்தின் மதிப்பைப் பிறருக்கு வழங்க எத்தனிப்பவர்கள் சட்டத்தின் உருவமாகத் திகழவேண்டும். உலகநாடுகள் சட்டத்தை உதவிக்கு அழைப்பவர்கள், உலகநாடுகளின் சட்டத்துக்குக் கீழ்ப்பணிய வேண்டும்.

ஐ.நா. பொதுச் செயலாளர் கோ·பி அன்னான்

******


போருக்குப் பின்னால் திட்டமிடாததி லிருந்து அபு கராப் சிறை அவலங்கள் வரை, எப்படிப் பார்த்தாலும், இராக்கில் தன் கையாலாகாத்தனத்தை வெள்ளைமாளிகை பறைசாற்றியிருக்கிறது. இருந்தாலும், அதிபர் புஷ் இராக்கில் விடுதலை பீடுநடை போடுகிறது என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருக்கிறார். இது தொடர்ந்தால், அமெரிக்கப் படைகள் பாக்தாதில் குவிந்து கொண்டிருந்த போது அமெரிக்கக் கா·பிர் நாய்கள் பின்வாங்கிக் கொண்டிருக்கின்றன என்று கதைவிட்டுக் கொண்டிருந்த இராக்கின் முன்னாள் பிரச்சார அமைச்சர் "கோமாளி அலி" யின் டெக்சாஸ் அவதாரம் அதிபர் புஷ் என்று மக்கள் கருத நேரிடலாம்.

எகானமிஸ்ட் இதழ்

******


அதிபர் ஜோர்ஜ் புஷ்ஷின் இளமைக்காலப் போதைப் பழக்கம் ஒரு பொருட்டல்ல. அவர் மண்டையில் மசாலா இல்லாதவர் என்பது தான் உறுத்துகிறது. ஜோர்ஜிக்கு எதைப் பற்றியும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற அறிவார்வமே கிடையாது. கருத்துகள், புத்தகங்கள், குறிக்கோள்கள் என்று எதைப்பற்றியும் அவருக்கு அக்கறையில்லை. பயணம் செய்ய மாட்டார்; செய்திகளைப் படித்ததோ, தொலைக்காட்சியில் பார்த்ததோ இல்லை; திரைப் படங்களுக்குக் கூடப் போக மாட்டார். எப்படி ஒருவர் மதுவையும், விளையாட்டுகளையும் தவிர்த்து உலகில் வேறு எதைப் பற்றியும் அக்கறை யில்லாமல் யேல் பல்கலைக்கழகத்திலிருந்து தேர்வு பெறமுடியும் என்று அதிர்ச்சியாக இருக்கிறது.

அதிபர் ஜோர்ஜ் புஷ்ஷின் கல்லூரி நாள் நண்பர், கிட்டிகெல்லியின் "புஷ் ராஜபரம்பரை" என்ற நூலில்

நெடுஞ்செவியன்
More

அப்துல் கலாமின் 'உதயமாகிறது வலிமைபடைத்த பாரதம்'
சென்னையின் கர்வம
காந்திஜி நினைவுகள்
காந்திஜி காப்பாற்றிய கொத்தடிமைத் தமிழர்
சிலிர்க்க வைத்த சிலப்பதிகாரம்
தூங்காதே ரயிலில் தூங்காதே!
சிந்தனைக்கு - நாமும் நம்மைச் சுற்றியிருப்பவர்களும்....
உண்மையில் நடந்தது
Share: 
© Copyright 2020 Tamilonline