Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | புதிரா? புரியுமா? | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
பொது
அப்துல் கலாமின் 'உதயமாகிறது வலிமைபடைத்த பாரதம்'
காந்திஜி நினைவுகள்
காந்திஜி காப்பாற்றிய கொத்தடிமைத் தமிழர்
சிலிர்க்க வைத்த சிலப்பதிகாரம்
தூங்காதே ரயிலில் தூங்காதே!
சிந்தனைக்கு - நாமும் நம்மைச் சுற்றியிருப்பவர்களும்....
உண்மையில் நடந்தது
காதில் விழுந்தது...
சென்னையின் கர்வம
- மதுரபாரதி|அக்டோபர் 2004|
Share:
சென்னை கணிதவியல் பயிலகம்

"ஐ.ஐ.டி.யில் நான் சேரப் போவதில்லை. சென்னை கணிதவியல் பயிலகத்தில்தான் (Chennai Mathematical Institute-CMI) என் கல்வியைத் தொடரப் போகிறேன்" என்று சென்னையின் பிரபலமான அந்தப் பள்ளியில் முதன்மையாகத் தேறிய ராமப்பிரசாத் கூறினான். மறுநாள் இந்தச் செய்தியை எல்லாப் பத்திரிக்கைகளும் வெளியிட்டன. மாட்டர்களா பின்னே? ஐ.ஐ.டி.க்கள் உலகப் புகழ்பெற்றவை. அதில் நுழைவதையே பெரும் கவுரமாகக் கருதுகிற இந்தக் காலத்தில் கிடைத்த இடத்தை விடுவதென்றால்...

"இது முதல் தடவையல்ல" என்கிறார் சி.எஸ். சேஷாத்ரி, இயக்குனர், சி.எம்.ஐ. "எமது பயிலகம் துவங்கிய முதல் ஆண்டிலேயே ஒரு மாணவர் இப்படிச் செய்திருக்கிறார். சில சமயம் சில விஷயங்களுக்கு அதிக விளம்பரம் கிடைத்து விடுகிறது, அவ்வளவுதான்" என்கிறார் இவர். கணிதவுலகில் பெருமதிப்புப் பெற்ற சேஷாத்ரிக்கு வயது 72. ஆனாலும் கணிதக் கல்லூரியைப் பற்றிப் பேசும்போது அவரது குரலில் இளமையும் உற்சாகமும் பெருக்கெடுக்கிறது.

இவர் Fellow of Royal Society (London)-ஆகத் தேர்ந்தெடுக்கப்படும் கவுரவத்தைப் பெற்றவர். மும்பையில் உள்ள டாட்டா அடிப்படை ஆய்வுப் பயிலகத்துடன் (Tata Institute of Fundamental Reasearch) முப்பதாண்டுக் காலத் தொடர்பு கொண்டவர்.

"பன்னாட்டுத் தரத்திலான ஒரு கல்லூரியே எமது குறிக்கோள்" என்கிறார் சேஷாத்ரி உறுதியாக. கல்வித்தரத்தில் அதை எட்டி விட்டாலும் அடிப்படை வசதிகள் முன்னேறாத நிலையில் இன்னும் இதை உலகுக்கு அறிவிக்க முடியவில்லை. ஆனால் இதுவரை வாடகைக் கட்டிடங்களில் இருந்துவந்த கல்லூரி இப்போது தனக்கேயான ஒரு சொந்தக் கட்டிடத்திற் கான அடித்தளக்கல் நாட்டு விழாவை அண்மையில் கொண்டாடியது.

'கணித ஒலிம்பிய'டில் உலக அளவில் பல பரிசுகளைப் பெற்ற இளைஞர்களை இந்தக் கல்லூரி தனது பதிவேட்டில் கொண்டுள்ளது. கல்லூரியில் நுழைவது எளிதல்ல. நுழைவுத் தேர்வைக் கடந்தாக வேண்டும். ஆனால் கணித ஒலிம்பியடில் பதக்கம் வாங்கியவர்களுக்கு விலக்கு உண்டு. கணிதத்தில் இளங்கலை (ஆனர்ஸ்) வகுப்போடு தொடங்கியனாலும் தற்போது முதுகலை (கணிதம்), இளங்கலை (இயற்பியல்) ஆகியவற்றையும் கற்பிக்கிறது. தவிர ஏராளமான முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் இங்கே வழிநடத்தப்பட்டிருக்கிறார்கள்.

இங்கே சேரும் மாணவர்களுக்கு கட்டண விலக்கு மற்றும் மாதாந்திரக் கல்வி நிதியுதவி ஆகியவை தரத்திற்கேற்ப வழங்கப்படுகின்றன. "பெரும் எண்ணிக் கையில் கணித ஆர்வம் சமுதாயத்தில் வரவேண்டும். அதிலே போட்டி மனப்பான்மையும், ஆராய்ச்சி ஊக்கமும் ஏற்படவேண்டும். அப்படி வரும்போது இங்கேயும் வளர்ந்த நாடுகளைப் போல கணிதத்தில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை கூடும். யாரோ ஓரிருவர் மட்டுமே சிறந்து விளங்குவதால் பயனில்லை" என்கிறார் சேஷாத்ரி. அந்த நிலையை வரவைப்பதில் சி.எம்.ஐ.யின் பங்கு முக்கியமானதாக இருக்கும்.

இந்தக் கல்லூரியில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் ·பிரான்சுக்கு அனுப்பப்படுகிறார்கள். அவர்கள் அங்கே இ.எம்.எஸ். (Ecole Normale Superieure) கல்விநிறுவனத்தில் கோடை மாதங்களில் ஆய்வு செய்யும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். இதே திட்டத்தின் கீழ் இ.எம்.எஸ்.ஸின் ஆய்வுநிலை மாணவர்கள் இங்கே வந்து வகுப்புகள் நடத்துகிறார்கள்."எல்லாவற்றிற்கு அடித்தளம் பொருளாதாரம் தான். அதை ஏற்படுத்தியாக வேண்டும்" என்கிறார் சேஷாத்ரி. சி.எம்.ஐ முதலில் ஸ்பிக் அறிவியல் அறக்கட்டளையின் ஒரு அங்கமாகத்தான் 1989-இல் துவங்கியது. பிறகு 1996-இல் சுயநிதிக் கல்விநிறுவனமாக மாறியபோதிலும் இதன் பெரும்பான்மை நிதி உதவி வருவது மத்திய அரசின் அணுசக்தித் துறையிலிருந்துதான். இப்போது ஸ்ரீராம் நிதி நிறுவங்களின் தியாகராஜன் மற்றும் பெயர் சொல்ல விரும்பாத சிலரின் நிதியுதவியால் சொந்தக் கட்டிடக் கனவு நனவாகத் தொடங்கியிருக்கிறது.

அரசு மற்றும் தனியார் கையை எப்போதும் எதிர்பார்த்தே இருக்கவேண்டுமானால் இதன் இயல்பான வளர்ச்சி தடைப்படும் வாய்ப்பு உள்ளது. தரத்தை உயர்த்துவதே நோக்கமாகப் பணியாற்றவேண்டுமானால் கீழ்க்கண்டவாறு வைப்புநிதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று கல்வியகத்தின் நிர்வாகக் குழு கண்டறிந்திருக்கிறது:

25 ஆசிரியர்களை நியமித்துப் பராமரிக்க : $3.1 மில்லியன்
நிலம், கட்டிடம், இதர வசதிகள் : $1.0 மில்லியன்
40 மாணவர்களுக்கு நிதி உதவி : $0.5 மில்லியன்
மொத்தம் : $4.6 மில்லியன்
மேற்சொன்ன தொகையிலிருந்து வரும் வட்டிவருமானம் மட்டுமே செலவிடப்படும். நிலம் கட்டிடம் ஆகியவற்றிற்கானது அதன் பொருட்டே செலவிடப்படும். நீங்கள் இவ்வகைகளில் உதவலாம்.

குறிப்பிட்ட துறையில் பீடம் ஏற்படுத்துதல் : $ 100,000
மாணவர் நிதியுதவி(ஒரு பட்டப் படிப்பு மாணவருக்கு): $ 10,000
(ஒரு ஆராய்ச்சி மாணவருக்கு) : $ 25,000
(முனைவர்நிலை கடந்த ஆய்வாளருக்கு) : $ 50,000

தவிர கட்டிடங்கள், நூலகம், பொது ஒதுக்கீட்டு நிதி ஆகியவற்றிற்காக உங்களால் இயன்ற எந்தத் தொகையும் அளித்துதவலாம். $ 100,000 மற்றும் அதற்கு மேல் கொடுப்பவர்களின் பெயர்கள் நன்கொடையாளர் விருப்பப்படி அவற்றிற்குச் சூட்டப்படும். சிறிய தொகைகளானாலும் நன்றியோடு வரவேற்கிறார்கள்.

அமெரிக்காவில் வழங்கப்படும் நிதிக்கு வரிவிலக்கு உண்டு. Foundation for the Advancement of Arts & Sciences from India Inc. (ARSI) என்ற அமைப்பு சி.எம்.ஐ.க்கு நிதி திரட்டும் பணியை ஏற்றுக் கொண்டுள்ளது.

இதன் தலைவர் ராஜு எஸ். குல்கர்னி. முகவரி:
Mr. Raju S. Kulkarni, President, ARSI,
1, Wayard Oaks, San Antonio,
Texas 78248, USA.

கணிதத்திற்கு இந்தியாவின் பங்கு என்றும் குறிப்பிடத்தக்கது. இப்போது நீங்கள் சென்னையில் உலகத்தரத்திலான ஒரு கணிதக் கல்லூரியை நிரந்தரப்படுத்த உதவும் அரிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறீர்கள். காலந்தாழ்த்தாமல் உங்களால் இயன்ற பொருளுதவியைச் செய்யுங்கள்.
இணையத்தளம்: http://www.cmi.ac.in
மின்னஞ்சல்: css@cmi.ac.in, office@cmi.ac.in

மதுரபாரதி
More

அப்துல் கலாமின் 'உதயமாகிறது வலிமைபடைத்த பாரதம்'
காந்திஜி நினைவுகள்
காந்திஜி காப்பாற்றிய கொத்தடிமைத் தமிழர்
சிலிர்க்க வைத்த சிலப்பதிகாரம்
தூங்காதே ரயிலில் தூங்காதே!
சிந்தனைக்கு - நாமும் நம்மைச் சுற்றியிருப்பவர்களும்....
உண்மையில் நடந்தது
காதில் விழுந்தது...
Share: 
© Copyright 2020 Tamilonline