Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | பயணம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
SIFA-அபிநயா வழங்கிய கீத கோவிந்தம்
பாலாஜி வேத மையம்: பங்குனி உத்திரத் திருவிழா
வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம்: சித்திரைக் கொண்டாட்டம் 2005
காஞ்சி காமகோடி சேவா நிறுவனம்: பேரா. ஏ.வி. ரகுநாதன் விளக்கவுரை
- அருணா|மே 2005|
Share:
Click Here Enlargeகாஞ்சி காமகோடி சேவா நிறுவனத்தின் (KKSF) அமெரிக்கக் கிளை நிர்வாகியான பேராசிரியர் ஏ.வி. ரகுநாதன் இந்நிறுவனம் தமிழ்நாட்டிலும் பிற இடங்களிலும் செய்து வரும் சமுதாய நலப் பணிகளைப் பற்றி எப்ரல் 9, 2005 அன்று மாலை ·ப்ரீமான்ட் ஹிந்து ஆலயத்தில் விளக்கிப் பேசினார். அதே நாள் காலையில் சன்னிவேல் ஹிந்து ஆலயத்திலும், மறுநாள் சான் ஓசே வைதிக கணபதி மையம், டப்லின் கலைக்கோவில் ஆகிய இடங்களிலும் அவர் உரை நிகழ்த்தினார்.

காஞ்சி காமகோடி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கைதானதால் துயரமடைந்துள்ள பக்தர்களை ஊக்குவிப் பதே சொற்பொழிவின் முக்கிய நோக்கமாக இருந்தது. அமெரிக்க மண்ணில் செப்டம்பர் 11 அன்று நியூயார்க் நகரில் நடந்த மாபெரும் துயரத்தை 9/11 என்று குறிப்படு வதைப் போல ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நவம்பர் 11-ம் நாள் கைதானதை 11/11 என்று பேரா. ரகுநாதன் குறிப்பிட்டார்.

சமீபத்தில் தமிழகம் சென்று திரும்பிய ரகுநாதன் அங்கு காஞ்சி ஆச்சாரியருக்காக நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டங்களையும், அவற்றில் பங்கேற்ற பொது மக்களின் உணர்வுகளையும் எடுத்துக் காட்டும் வகையில் தாம் எடுத்து வந்த வீடியோ படம் ஒன்றைத் திரையிட்டார். ''ஜனார்த்தன சேவை மட்டுமல்லாமல் ஜன சேவையிலும் காஞ்சி மடம் ஈடுபட வேண்டும்'' என்பது ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் கருத்து. இதனால் காஞ்சி மடம் மதம் சம்பந்தமான செயல்கள் தவிர, KKSF போன்ற சேவை நிறுவனங்கள் மூலம் சங்கர மடம் பலவகைப் பொதுநலப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றது என்பதைப் பேராசிரியர் விவரித்தார்.

இந்தியாவின் பல்வேறு பாகங்களிலும் சுமார் முந்நூற்றுக்கு மேற்பட்ட சேவை அமைப்புகள் காஞ்சி மடத்தைச் சார்ந்தவை. இவற்றில் பல நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள், மகளிர் விடுதிகள், மருத்துவசாலைகள் போன்ற பொதுநல நிறுவனங்களும் அடங்கியுள்ளன. KKSF-USA நடத்தி வரும் பொதுநலப் பணிகளைப் பற்றி www.kksfusa.org என்ற வலைத் தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். காஞ்சி ஆச்சாரியர் கைதானதால் ஏற்பட்ட இக்கட்டான நிலையில் காஞ்சி மடத்தின் மதம் சம்பந்தமான நடவடிக்கைகளுக்கு மட்டுமல்லாமல், பொதுப்பணிக்கான ஆதரவும் பெருமளவில் குன்றிவிட்டது எனப் பேராசிரியர் சுட்டிக் காட்டினார்.

உதாரணமாக, சென்னை பம்மல் நகரில் KKSF நடத்தி வந்த மகளிர் விடுதியைத் தொடர்ந்து நடத்தப் பொதுமான நிதியில்லாததால், மடத்தில் ஆதரவாளர் ஒருவரின் தனிப் பொறுப்பில் விட நேர்ந்துள்ளது. ஒரிஸ்ஸா மாநிலத்திலும், கார்கில் யுத்தத்தினால் பாதிப்பு ஏற்பட்ட போதும் விரைந்து உதவிப் பணிகளில் ஈடுபட்ட KKSF, நிதியுதவி பெருமளவில் குறைந்ததால் சமீபத்தில் ஏற்பட்ட சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்க்கான நிவாரணப் பணிகளில் ஈடுபட முடியாத நிலையிலுள்ளது. இந்து தர்மம் மிகவும் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, மனதாலும், செயலாலும், நிதியுதவியாலும் KKSF-USA போன்ற நிறுவனங்கள் மூலமாக சமுதாயப் பணிகளை ஆதரிக்க வேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்தார்.
சொற்பொழிவின் இறுதியில் வினாக் களுக்கு விடையளித்தார். மடங்களின் நடவடிக்கைகளில் அரசாங்கம் குறுக்கிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது என்றும், சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் பல்வேறு இந்து மத நிறுவனங்கள் ஒன்று சேரும் பொருட்டு 'ஆசார்யா சபா' ஒன்றைத் துவக்கியுள்ளார் என்றும் பேராசிரியர் கூறினார்.

KKSF-USA போன்ற அற நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் வாழும் இந்திய அமெரிக்கர்கள் நிதியுதவி அளிப்பதை அமெரிக்க அரசாங்கம் எவ்விதமாக நோக்கும் என்று ஒருவர் கேட்டார். செப்டம்பர் 11 துயரத் திற்குப் பிறகு அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்று மதம் சார்ந்த நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் நன்கொடைகள் உண்மையான பொதுப் பணிகளுக்கு உதவுகின்றனவா அல்லது தீவிரவாத நடவடிக்கைகளுக்குப் போய்ச் சேருகிறதா என்று ஆராய்வதாகும்.

இதற்கு பதிலளித்த பேராசிரியர் ரகுநாதனும் 'Hindu American Foundation' நிறுவனத்தைச் சார்ந்த மெஹர் என்பவரும் கூறியது: ''KKSF-USAவைப் பொறுத்த வரையில் இது ஒரு பிரச்சினையே அல்ல. இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்த ஒரு இந்து நிறுவனமும், அமெரிக்க அரசாங்கத்தின் தீவிரவாதிகள் பட்டியலில் இடம்பெறவில்லை" என்று உறுதியளித்தனர். 'மக்கள் சேவையே மகேசன் சேவை' என்பதில் நம்பிக்கை கொண்ட இந்துக்கள் பொதுப்பணிகளுக்கு ஆதரவு தரவேண்டும் என்பதே இந்தச் சொற்பொழிவுகளின் மையக் கருத்தாக அமைந்தது.

அருணா
More

SIFA-அபிநயா வழங்கிய கீத கோவிந்தம்
பாலாஜி வேத மையம்: பங்குனி உத்திரத் திருவிழா
வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம்: சித்திரைக் கொண்டாட்டம் 2005
Share: 


© Copyright 2020 Tamilonline