Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | சமயம்
சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | எனக்குப் பிடித்தது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
நாமசங்கீர்த்தன யாத்திரை
ஸ்ரீ கிருஷ்ண பிருந்தாவனம்: பிருஹதீ சஹஸ்ர மஹாயக்ஞம்
- நர்சி கஸ்தூரி|ஜூலை 2018|
Share:
2018 ஜூலை 14-15 தேதிகளில் சான் ஹோசே ஸ்ரீ கிருஷ்ண பிருந்தாவன ஆலயம் ஸ்ரீ பிருஹதீ சஹஸ்ர மஹாயக்ஞத்தை ஏற்பாடு செய்துள்ளது. 43 Sunol Street, San Jose என்ற முகவரியில் இது நடைபெறும். பிருஹதீ என்பது வேதத்தை உச்சரிக்கும் சந்தஸ்களில் ஒன்றாகும். விஷ்ணு சஹஸ்ரநாமத்தை வேத ரிக்குகளாக ஓதுவது 'பிருஹதீ சஹஸ்ரம்' எனப்படும். ஜூலை 14 அன்று மாலை 6 மணிக்குக் கலசப் பிரதிஷ்டாபனத்துடன் நிகழ்ச்சி தொடங்கும். மறுநாள் காலை 7 மணிக்கு யக்ஞம் தொடங்கி மதியம் 1 மணிக்கு நிறைவுறும்.

ஐதரேய உபநிஷத பாஷ்யத்தில் ஸ்ரீ மத்வாச்சாரியார் "பிருஹதீ சஹஸ்ரம் பகவானுக்கு எத்தனை மகிழ்ச்சி தருகிறதென்றால், அது அவருக்கு அன்னம் போன்றது" என்று கூறியுள்ளார். விருத்திராசுரனை வதம் செய்ததால் இந்திரனுக்குப் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டதாம். அதனை நீக்க இந்திரன் இந்த பிருஹதீ சஹஸ்ர யக்ஞத்தை விஸ்வாமித்திர மகரிஷியைக் கொண்டு செய்வித்ததாகப் புராணம் கூறுகிறது.

மேலும் விவரங்களுக்குத் தொலைபேசுக: 408-416-3624
நர்சி கஸ்தூரி,
சான் ஹோசே, கலிஃபோர்னியா
More

நாமசங்கீர்த்தன யாத்திரை
Share: 




© Copyright 2020 Tamilonline