Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | சிறப்புப் பார்வை
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
நதிகளை மீட்டெடுக்கத் திரளுங்கள்
- செய்திக்குறிப்பிலிருந்து|அக்டோபர் 2017|
Share:
"இது எதிர்ப்பல்ல. இது போராட்டமல்ல. நமது நதிகள் வற்றிக் கொண்டிருக்கின்றன என்பதை மக்களுக்கு அறிய வைக்கும் விழிப்புணர்வுப் பேரணி. தண்ணீரைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் நதிகளுக்காக அணி திரள வேண்டும்" என்கிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஸ்ரீ ஜக்கி வாசுதேவ். இந்திய நதிகளை மீட்டெடுப்பதற்கென உலகளாவிய இயக்கமொன்றைத் தொடங்கி வைத்த சத்குரு இவ்வாறு கூறினார். இதை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காக சத்குரு அவர்கள் கன்யாகுமரி முதல் இமயம் வரை 16 மாநிலங்கள் வழியே பயணம் மேற்கொள்கிறார். இந்த நிகழ்ச்சித் தொடரில் 21 பிரம்மாண்டப் பேரணிகளும் பற்பல சிறிய நிகழ்வுகளும் இடம்பெறும். உலகாளாவிய மக்களோடு தொடர்பு கொள்வதற்கென ஆன்லைன் நிகழ்வுகளும் உண்டு. 13 மாநில முதல்வர்கள் இதில் பங்கேற்க உறுதியளித்துள்ளார்கள். செப்டம்பர் 3ம் தேதியன்று கோயம்பத்தூரில் நடந்த பேரணியின் துவக்க விழாவில் வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான மத்திய அமைச்சர் டாக்டர். ஹர்ஷ வர்தன் பங்கேற்றார். புது டெல்லியில் அக்டோபர் 2ம் தேதி இதன் நிறைவுவிழா அரசியல், வர்த்தகம் திரை, விளையாட்டு மற்றும் பிற துறைப் பிரபலங்களின் முன்னிலையில் நடைபெறும்.

இது குறித்த கொள்கை ஆவணம் ஒன்றைச் சூழலியல் அறிஞர்கள், சட்ட வல்லுனர்கள் கொண்ட வல்லுனர் குழாம் ஒன்று தயார் செய்துள்ளது. நதிகளில் நீரை மீட்டெடுக்க மிக எளிய ஆனால் பயன்தரும் பல வழிகளை இந்தக் கொள்கை நம்முன் வைக்கிறது. நதிகளின் ஓரம் 1 கி.மீ. (உபநதிகளுக்கு 1/2 கி.மீ) தூரத்துக்குக் காடு வளர்த்தல் இதில் ஒன்றாகும். அரசு நிலங்களில் காட்டு மரங்களை வைக்கலாம். தனியார் நிலங்களில் மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கலாம். இதனால் ஏற்படும் ஈரமண், ஆண்டு முழுவதும் நதியில் நீர் ஓடுமாறு பார்த்துக்கொள்ளும், வெள்ளப் பெருக்கு, வறட்சி, மண் அரிப்பு ஆகியவற்றைத் தடுக்கும்.

ஈஷா அறக்கட்டளையுடன் கலந்தாலோசித்து மத்தியப் பிரதேச அரசு நர்மதை நதிக்கரையில் மரங்களை நடுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. கோதாவரி நதிக்கரையில் 500 மில்லியன் மரங்களை நடுவதற்கு மஹாராஷ்டிர அரசுடன் ஒப்பந்தமொன்றில் ஈஷா ஜூலை 1ம் தேதி கையொப்பமிட்டது.

011 91 8000980009 என்னும் கட்டணமற்ற தொலைபேசி எண்ணை அழைத்து, உடனடியாகத் தொடர்பைத் துண்டிப்பதன் மூலம் நீங்களும் உங்கள் ஆதரவைத் தெரிவிக்கலாம்.

அரசியல் கட்சிகள், சமுதாயத்தின் பலதரப்பட்ட மக்கள் எனக் குறுகிய வரம்புகளைத் தாண்டி, நதிகளை இணைக்கும் பேரணிக்கு ஆதரவு பெருகி வருகிறது. ஆதரிப்போரில் World Aqua Foundation, CII, Border Security Force, IFFCO, ACMA, NASSCOM, IRCTC, Karnataka Bank, Retailers Association of India, Micro Finance associations, SCOPE, Apollo Hospitals, URJA, National Small Industries Corporation, INOX, Indigo Airlines, DAV Schools, Spic Macay, and Educomp Solutions ஆகிய நிறுவனங்களும் 30 மாநகராட்சிகளும் அடங்கும்.
நதிகளை மீட்டெடுப்பதற்கான தேவை மற்றும் வழிகள் குறித்து 100,000 பள்ளிகளில் எழுத்து மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதற்கென குறும்படப் போட்டி ஒன்று சேகர் கபூர், ராகேஷ் ஓம்பிரகாஷ், பிரஹலாத் கக்கர் ஆகியோரின் துணையோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

"ஒரே ஒரு தலைமுறைக் காலத்தில் வற்றாத ஜீவநதிகள், மழைக்கு ஏங்கும் நதிகளாக மாறிவிட்டன. பல சிறிய நதிகள் காணாமல் போய்விட்டன. இந்தப் போக்கை மாற்றாவிட்டால், அடுத்த தலைமுறைக்கு நாம் போராட்டத்தையும் வறுமையையும் தான் கொடுத்துவிட்டுப் போவோம்" என்கிறார் சத்குரு.

சிந்தித்துப் பார்த்தால் இது இந்தியாவுக்கு மட்டுமான சவால் அல்ல. தேச எல்லைகளைத் தாண்டி, உலகெங்கிலும் நதிகளைக் காப்பதும் மீட்டெடுப்பதும் அவசியமாக இருக்கிறது. உணவும் நீரும் தந்து உயிர்களைக் காக்கும் நதிகளுக்குப் புத்துயிர் தருவது உலக அளவில் மிக அவசியம்.

இதையே சத்குரு அவர்கள் "நீரைப் பருகும் ஒவ்வொருவருமே நதிகளுக்காகப் பேரணி திரளவேண்டும் #RallyForRivers. வாருங்கள் அதை நடத்திக் காட்டுவோம்" என்று அழகாகக் கூறியுள்ளார்.

மேலும் தகவலுக்கு: 9487475346 (இந்தியா)

செய்திக்குறிப்பிலிருந்து
Share: 




© Copyright 2020 Tamilonline