Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது
தெரியுமா?: மவுண்டன் ஹவுஸ் தமிழ்ப் பள்ளி (Mountain House Tamil School)
தெரியுமா?: Inclusive World: மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையம்
தெரியுமா?:AID Bay area: 'உணவு,விவசாயம் மற்றும் எதிர்காலம்'
- வித்யா பழனிசாமி|நவம்பர் 2016|
Share:
நவம்பர் 5, 2016 சனிக்கிழமை அன்று, ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் ஹவானா அறையில், மதியம் 2:00 மணிமுதல் 5:00 மணிவரை, Association for India's Development (AID Bay area) மற்றும் ஆஷா ஸ்டான்ஃபோர்டு இணைந்து ‘உணவு,விவசாயம் மற்றும் எதிர்காலம்' நிகழ்ச்சியை வழங்குகின்றனர். இதில் கீழ்க்கண்ட நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

சொற்பொழிவு: ரேவதி
15 ஆண்டுகளாக இயற்கை மற்றும் விவசாயம், நிலையான வேளாண் தொழில்நுட்பம் ஆகிய களங்களில் தீவிரமாகச் செயல்பட்டுவரும் திருமதி. ரேவதி சிறப்புரையாற்றுவார். நாம் உண்ணும் உணவு, பருவநிலை மாற்றம் மற்றும் இயற்கைச் சீற்றங்களால் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றியும், பாரம்பரிய வேளாண்மையால் விவசாயிகளும் நாமும் பெறும் நன்மைகளைப் பற்றியும், காணொளிகள், புகைப்படங்கள் துணையுடன் ரேவதி தன் அனுபவங்களை விவரிப்பார்.

மாற்றுத் தானியங்கள் சமையல் போட்டி
அரிசி, கோதுமை, மக்காச்சோளம் தவிர்த்து, கம்பு, வரகு, சாமை, சோளம் போன்றவற்றைக் கொண்டு சுவைபடச் சமைக்க முடியுமா? உங்கள் திறனை வெளிப்படுத்த ஓர் அரிய வாய்ப்பு. இப்போட்டியில் பங்கேற்க இங்கே பதியுங்கள்: www.aidbayarea.org/revathi.html

சிறுவர் பயிலரங்கு
அடுத்த தலைமுறையினருக்கு ஆரோக்கியமான உணவுகள், உணவுப் பழக்கங்கள் மற்றும் தாங்களே உணவை வளர்ப்பது எப்படி என்பது போன்றவற்றைச் செயல்முறையில் கற்றுத்தரும் ஆரம்பப் பயிலரங்கு இது. சிறுவர்கள் தாம் கற்றறிந்ததைப் படம், கவிதை, பாட்டு மூலம் வெளிப்படுத்தலாம்.

நிகழ்ச்சிகள் இலவசம்.
இடம்: 750, Escondido Road, Stanford, CA
மேலும் விபரங்களுக்கு: www.aidbayarea.org/events.html
தொடர்புக்கு: info@bayarea.aidindia.org / 970.314.5761
ரேவதி:
15 வருடங்களாக இயற்கை மற்றும் பாரம்பரிய விவசாயம், நிலையான வேளாண் தொழில்நுட்பம், இடஞ்சார்ந்த உணவுகள் போன்றவைப் பற்றியும், நுகர்வோர் உடல்நலம், விவசாயிகள் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணல் பற்றியும் ஆய்வு செய்கிறார். இதுவரை 11,00,000+ விவசாயிகள் ரசாயனமுறை விவசாயத்தை விட்டு இயற்கை விவசாயத்திற்கு மாற ரேவதியின் Inspire அமைப்பு வழிவகுத்துள்ளது. இந்தியா மட்டுமின்றி இந்தோனேசியா, இலங்கை விவசாயிகளுக்கும் இம்முறைகளைக் கொண்டு சென்றுள்ளார்.

அமெரிக்கச் சுற்றுப்பயணம்:
ரேவதி இவ்வாண்டு செப்டம்பர் முதல் டிசம்பர்வரை வட அமெரிக்காவில் முப்பதுக்கும் மேற்பட்ட AID கிளைகளையும், அவற்றைச் சுற்றியுள்ள வேளாண் அமைப்புகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களையும் சந்திக்கவுள்ளார்.

பயண விபரங்களை அறிய: aidindia.org

நீங்களும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தவும், வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்யவும் உதவலாம். உங்களை வரவேற்க AID ஆவலுடன் காத்திருக்கிறது.

வித்யா பழனிசாமி,
கலிஃபோர்னியா
More

தெரியுமா?: மவுண்டன் ஹவுஸ் தமிழ்ப் பள்ளி (Mountain House Tamil School)
தெரியுமா?: Inclusive World: மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையம்
Share: 




© Copyright 2020 Tamilonline