Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | நூல் அறிமுகம் | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
அரங்கேற்றம்: ராஹுல் சுவாமிநாதன்
சிருஷ்டி: 'சம்பாவனா' நடன சமர்ப்பணம்
ஸ்ரீபாதுகா அகாதமி: அநிருத் ராஜா பாட்டுக்கச்சேரி
அரங்கேற்றம்: அக்ஷய் பிரபாகரன்
அரங்கேற்றம்: அனன்யா, அக்ஷயா
ஹம்சத்வனி: இசைநிகழ்ச்சி
அரங்கேற்றம்: ஸ்ரீராம் சுப்பிரமணியன்
அரங்கேற்றம்: நேத்ரா கௌஷிக்
சங்கர நேத்ராலயா: MS நூற்றாண்டு விழா
டாலஸ்: நள-தமயந்தி நாட்டிய நாடகம்
- செய்திக்குறிப்பிலிருந்து|அக்டோபர் 2016|
Share:
செப்டம்பர் 10, 2016 அன்று, தொல்காப்பியம் அறக்கட்டளைக்காக டாலஸ் மெஜஸ்டிக் அரங்கத்தில் அமெரிக்கர்கள், மத்திய கிழக்காசியர்கள், சீனர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்கள் பங்கேற்ற நள-தமயந்தி நாட்டிய நாடகம் நடைபெற்றது. இல்லினாய்ஸ் மாநிலத்தின் பியோரியா நகரில் இயங்கிவரும் மைதிலி டான்ஸ் அகாடமி குழுவினர் இதனை வழங்கினார்கள். பாரம்பரிய நடனம், பாலிவுட், ராஜஸ்தானி, சூஃபி, பாங்க்ரா, நாட்டுப்புற நடனம், மலைவாசி நடனம், பாம்பு நடனம். அமெரிக்க நடனம் மற்றும் சமகால நடனங்கள் இதில் இடம்பெற்றன.

நளன் அறிமுகக்காட்சியைக் கத்திச்சண்டையுடன் புதுமையாக அமைத்திருந்தார்கள். தமயந்தியின் அறிமுகம் பாலே நடனத்துடன் இயல்பாக இருந்தது. விசிறி நடனம், பெல்லி டான்ஸ், பறையிசையுடன் தமிழக நாட்டுப்புற நடனம் யாவும் சம்பவத்துக்கேற்பப் பயன்படுத்தப்பட்டிருந்தன. கார்கோடகன் கடித்ததும் நளன் கூனனாக மாறுவதைக் கண்ணிமைக்கும் பொழுதில் நிகழ்த்திப் பார்வையாளர்களைப் பிரமிக்க வைத்தனர்.
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தொல்காப்பியம் அறக்கட்டளை அறிமுகம் செய்யப்பட்டது. அறக்கட்டளை சார்பில் அரங்கம், பூங்கா, படிப்பகம், கூடுமிடம் உட்பட அனைத்து வசதிகளுடன் கூடிய வளாகம் கட்டுவதற்கான நிதி திரட்டும் நிகழ்ச்சியாக இது அமைந்தது. அறக்கட்டளை நிறுவனர் திரு. பால்பாண்டியன், தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. கால்டுவெல், திரு. சீனிவாசன், திரு. முருகானந்தன் ஆகியோரும், புகழ்-சாந்தி, சரத்-திருவேங்கடம், ரவிந்திரன்–மகாலக்ஷ்மி, அருண்-அனிதா, ஆதிரை-பாஸ்கரன் இணையரும் குறிப்பிடத்தக்க தொகைகளை நன்கொடையாக வழங்கினர். ரமா சுரேஷ், பிரசன்னா, ரெபேக்கா, கெக்கெ, யாமின், கிரிஜா, கியாதி, ஸைரா, ஆகிய நடன ஆசிரியர்கள் நடனங்கள் அமைத்திருந்தனர். ரமா சுரேஷ் நிகழ்ச்சியை இயக்கினார். உதவி இயக்குனர் பிரசன்னா பல்வேறு நடனங்களிலும் பங்கேற்றார். சந்தோஷ்-கோமதி காட்சிகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் விவரித்தார்கள். சித்ரா மகேஷ், கோமதி தொகுத்து வழங்கினார்கள் ரவி வரவேற்புரை ஆற்றினார். புகழ் தொல்காப்பியம் அறக்கட்டளையை அறிமுகப்படுத்தினார். அறக்கட்டளையின் நோக்கம் மற்றும் செயல்திட்டங்களை அருண் விவரித்தார். கிருஷ்ணராஜ் நன்றியுரை கூறினார்.
More

அரங்கேற்றம்: ராஹுல் சுவாமிநாதன்
சிருஷ்டி: 'சம்பாவனா' நடன சமர்ப்பணம்
ஸ்ரீபாதுகா அகாதமி: அநிருத் ராஜா பாட்டுக்கச்சேரி
அரங்கேற்றம்: அக்ஷய் பிரபாகரன்
அரங்கேற்றம்: அனன்யா, அக்ஷயா
ஹம்சத்வனி: இசைநிகழ்ச்சி
அரங்கேற்றம்: ஸ்ரீராம் சுப்பிரமணியன்
அரங்கேற்றம்: நேத்ரா கௌஷிக்
சங்கர நேத்ராலயா: MS நூற்றாண்டு விழா
Share: 




© Copyright 2020 Tamilonline