Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம் | கவிதைப்பந்தல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது
பாட்டி சொன்னா கேட்டுக்கணும்
கொலு ஹாப்பிங்!
சங்கர நேத்ராலயாவுக்காக 'கருணையின் சிறு செயல்கள்'
புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012
பாஸ்டனில் மார்பகப் புற்றுக்கு எதிரான நடை
Carnatic Music Idol USA
ஹேமா முள்ளூர் புதிய பதவி
'3rd i' திரைப்பட விழா
- ஜனனி நாராயணன்|நவம்பர் 2011|
Share:
தெற்காசியர்களின் மாறுபட்ட பிம்பங்களை முற்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்டது 'தர்டு ஐ' (மூன்றாம் கண்). சான் ஃபிரான்சிஸ்கோவின் மிஷன் மாவட்டத்தில் உள்ள இதை ஐவன் ஜெய்கிர்தார், ஷில்பா மன்கிகர், கெமில் ரமணி ஆகியோர்

2001ம் ஆண்டு தொடங்கினர். முதலில் மாதம் இருமுறை திரைப்படங்களைக் காண்பித்தது தர்டு ஐ. இதற்குக் கிடைத்த வரவேற்பு, ஆண்டுக்கொரு முறை திரைப்பட விழா ஒன்றை நடத்தும் உற்சாகத்தை இவர்களுக்குத் தந்தது. 2003ல் நடந்த

முதல் விழாவில் 1200 பேர் கலந்து கொண்டனர். அடுத்த ஐந்து வருடங்களுக்குள் நான்கு நாள் விழாவாக இது மாறியதோடு இதற்கு வருவோரின் எண்ணிக்கையும் 5000 ஆக உயர்ந்தது.

மூன்றாம் கண்ணின் இணை இயக்குநரான அனுஜ் வைத்யா ஒரு கலைஞர், கல்வியாளர், ஊடகக் காப்பாளர். இவரது முயற்சியில் இவ்வமைப்பு 'மினி-ஃபெஸ்ட்' எனப்படும் குறுவிழாக்களையும், இடம்பெயரும் தொடர்களையும் ('Cruel

Cinema: New Directions in Tamil Film', லலிதா கோபாலனுடன் இணைந்து) தொடங்கியது. அனுஜின் படங்களான 'Chingari Chumma' (with Tejal Shah, 2000), 'Bad Girl with a Heart of

Gold' (2004) உலகின் பல திரைப்பட விழாக்களிலும் காண்பிக்கப் பட்டன.

9ம் திரைப்பட விழா 2011 நவம்பர் 9 முதல் 13 வரை Castro மற்றும் Brava திரையரங்குகளில் நடபெறவுள்ளது. இதன் மையக்கருத்து 'ஸ்ரீலங்கா மீது கவனம்' என்பதாகும். 'Gamperaliya' (லெஸ்டர் ஜேம்ஸ் பெரி),

'Letter of Fire' (அசோகா ஹண்டகாமா), 'Flying Fish' (சஞ்சீவ புஷ்பகுமாரவின் 'Igillena Maluwo'), 'What is Time?' (ஷிரீன் பாஷா) ஆகிய படங்கள் தற்போது இலங்கையில் எடுக்கப்படும் படங்களின்

புதிய அழகியலைக் காட்டும். 'Gamperaliya' படப் பார்வையாளர்களுக்கு ஒரு விருந்து காத்திருக்கிறது. ஸ்ரீலங்காவில் தடை செய்யப்பட்ட 'Letter of Fire' என்ற சர்ச்சைக்கிடமான படத்தின் இயக்குனர் அசோகா ஹந்தகாமா

'இலைங்கைப் படங்களின் வரலாற்று ரீதியான மற்றும் தற்போதைய முனைப்புகள்' என்பது குறித்துப் பேசவிருக்கிறார்.
விழாவின் இறுதி நாளன்று தமிழ் த்ரில்லரான 'புதுப்பேட்டை' திரையிடப் படும். ஓர் இளம் அரசியல்வாதி அரசியலில் நுழைவதற்குப் படும் பாட்டை விவரிக்கும் படம் இது. தவிர, விரிகுடாப் பகுதி மேடைநாடகப் புகழ் மணி ராம் எழுதி இயக்கிய

6 நிமிடக் குறும்படம் 'First of Many' இந்த விழாவில் திரையிடப்படுகிறது.

2009 முதல் சுற்றுச் சூழல் குறித்த 'Green Eye', LGBT (மாற்றுப் பாலினத் தேர்வு) கொண்டோர் குறித்த 'Queer Eye' போன்ற குறுவிழாக்களை நடத்தி வருகிறது.

சீட்டுகளுக்கும் அனுமதி அட்டைக்கும்: www.thirdi.org
மேலும் விவரங்களுக்கு: www.thirdi.org

ஜனனி நாராயணன்,
சன்னிவேல், கலிஃபோர்னியா
More

பாட்டி சொன்னா கேட்டுக்கணும்
கொலு ஹாப்பிங்!
சங்கர நேத்ராலயாவுக்காக 'கருணையின் சிறு செயல்கள்'
புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012
பாஸ்டனில் மார்பகப் புற்றுக்கு எதிரான நடை
Carnatic Music Idol USA
ஹேமா முள்ளூர் புதிய பதவி
Share: 




© Copyright 2020 Tamilonline